தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தமது குறைகளை மாவட்ட ஆட்சியரகத்தில் தெரிவிக்க - கட்டணமில்லாத சிறப்பு தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தமது குறைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077இல் அலுவலக நேரங்களில் தொடர்புகொண்டு, தங்களது அவசர கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.
மேற்படி கோரிக்கைகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எழுத்து மூலமும் கோரிக்கைளை வழக்கம் போல தெரிவிக்கலாம்.
கிராமங்களில் நடைபெறும் மணல் திருட்டு, பள்ளி வாகனங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் பி குற்றங்கள் தொடர்பான அவசர கோரிக்கைகளையும் மேற்கண்ட கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
இச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |