காயல்பட்டினத்தில், நகராட்சி மன்ற வளாகம் உள்ளிட்ட பொது இடங்களிலும், அனைத்துத் தெருக்களிலும் தெரு நாய்கள் நாளுக்கு நாள் பெருக்கமடைந்து, இரவு நேரங்களில் வீதிகளைக் கடந்து செல்வோருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது.
விளைவை உணர்ந்த பொதுமக்கள் அவரவர் பகுதி நகர்மன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டதையடுத்து, பல நகர்மன்றக் கூட்டங்களில் இதுகுறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தெரு நாய்களைக் கொல்ல அனுமதியில்லை எனினும், அவற்றுக்கு கருத்தடை செய்து இனப்பெருக்கத்தைத் தடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு, நாய்களுக்கு கருத்தடை செய்ய நகராட்சியில் தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், அநாதயைாகத் திரியும் தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்யும் முகாம் 27.06.2012 தேதியிலிருந்து துவங்கி, 03.07.2012 தேதியுடன் 284 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்ட நிலையில் முகாம் நிறைவுற்றுள்ளது. நாய்களுக்கான கருத்தடை பணிகளை - ராஜேஸ்வரி கோசாலா ட்ரஸ்ட் நிறுவனத்தினர் செய்துள்ளனர். |