வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதியன்று, காயல்பட்டினம் நகராட்சியின் இரு சேவைகள் மீண்டும் ஏலம் விடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது:-
இதனால் காயல்பட்டினம் நகராட்சி பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்,
காயல்பட்டினம் நகராட்சிக்குப் பாத்தியப்பட்ட கீழ்க்கண்ட பட்டியலில் காணப்படும் இனங்களுக்கு பொது ஏலம் 2012-2013ஆம் வருடத்திற்கு, 2012ஆம்
ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி திங்கட்கிழமையன்று காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை காயல்பட்டினம் நகராட்சி அலுவலக
கணினி மையத்தில் உரிய ஏலத்திற்கான டேவணித் தொகையை செலுத்தி, செலுத்திய சீட்டு நகலுடன் ஏலத்தில் கலந்து கொள்ள ஆணையாளர்
அல்லது அவரது அதிகாரம் பெற்றவரிடம் ஏலப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அன்றைய தினமே மதியம் 3.00 மணி முதல் 4.30
மணிக்குள் ஏலத்தில் டேவணித் தொகை செலுத்தி கலந்து கொள்ளும் அனைத்து நபர்கள் முன்னிலையிலும் வெளிப்படையான ஏலம் விடப்படும். ஏலம்
எடுத்த ஏலதாரர்கள் ஏலத் தொகை முழுவதையும் 13.08.2012 அன்றே செலுத்தி விட வேண்டும். தவறும் பட்சத்தில் ஏலம் ரத்து செய்யப்படும்.
வ.எண் |
ஏலம் விடப்படும் பொருள் / சேவை |
குத்தகை காலம் |
01 |
நகராட்சி வளாகத்தில் மற்றும் நகராட்சி பகுதியில் ஆடு / மாடு அறுக்கும் தொட்டி |
14.08.2012 முதல் 31.03.2013 முடிய |
02 |
பேருந்து நிலையத்தில் பேருந்து நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமம் |
14.08.2012 முதல் 31.03.2013 முடிய |
நிபந்தனைகள்:
(01) ஏலம் கேட்க விருப்பமுள்ளவர்கள், டேவணித் தொகை முழுவதும் செலுத்தி ஏலம் கேட்க வேண்டும்.
(02) கூடுதல் ஏலம் எடுத்தவர், ஏலத் தொகை முழுவதையும் ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும்.
(03) கூடுதல் ஏலம் முடிவு நகராட்சி மன்ற அங்கீகாரத்திற்கு உட்பட்டது .
(04) ஏலம் முடிவு செய்யப்பட்டதும், ரூபாய் 20க்கான ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும்.
(05) ஏலத்தில் கலந்துகொள்ளும் எந்தவொரு நபரும், இதற்கு முன்பு நகராட்சிக்கு சம்பந்தப்பட்ட கடைகளையோ அல்லது இடங்களையோ
குத்தகைக்கு எடுத்து, முறையாக ஏலத்தொகை செலுத்தாதிருந்தால், அவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
(06) எவ்வித காரணமும் காட்டாமல் ஏலத்தை ரத்து செய்யவோ அல்லது மறு ஏலம் கேட்கவோ நிர்வாக அதிகாரிக்கு அதிகாரமுண்டு.
(07) எந்த சந்தர்ப்பத்தில் தேவையானது என நிர்வாக அதிகாரி அவர்களால் கருதப்படும் எந்த விதமான முடிவை எடுக்கவும் அவருக்கு அதிகாரமுண்டு.
(08) ஒப்பந்தக் கட்டுப்பாட்டை மீறி நடந்த குற்றத்திற்கான பொறுப்புத் தொகையை பறிமுதல் செய்வதில் மன்றத்தின் தீர்மானமே முடிவானதாகும்.
(09) ஏலத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்க நிர்வாக அதிகாரிக்கு உரிமை உண்டு.
(10) நகராட்சி நிர்ணயம் செய்யும் கட்டணத்தை மட்டுமே ஏலதாரர் வசூல் செய்ய வேண்டும்.
(11) மின் கட்டணத்தை ஏலதாரரே செலுத்த வேண்டும்.
(12) மின் மோட்டார் பழுது ஏற்பட்டால் ஒப்பந்தக்காரர் பொறுப்பில் செய்ய வேண்டும்.
(13) ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர் நகராட்சிக்கு எந்த வித பாக்கியம் இல்லை என்ற சான்று நகராட்சியில் பெற்று சமர்பிக்க வேண்டும்.
(14) நகராட்சியின் மூலம் நிர்ணயிக்கும் தொகையினைதான் ஏலதாரர் வசூல் செய்ய வேண்டும். கூடுதல் தொகை வசூலிக்கப்படும் தகவல்
தெரியவந்தால் தங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு ஏலத்தொகை பறிமுதல் செய்யப்படும்.
(15) ஏலம் கிடைக்காத நபர்களுக்கு செலுத்தப்பட்ட டேவணித் தொகை காசோலை மூலம் மட்டுமே இரண்டு தினங்கள் கழித்த பிறகு வழங்கப்படும்.
இவண்,
காயல்பட்டணம் நகராட்சி, காயல்பட்டணம்.
இவ்வாறு ஏல அறிவிப்பு அமைந்துள்ளது.
இச்சேவைகள் ஏலம் விடப்படுவது - இது மூன்றாவது முறையாகும். மே மாதம் 29 ம் தேதி இச்சேவைகள்
ஏலம் விடப்பட்டதில் - நகராட்சி வளாகத்தில் மற்றும் நகராட்சி பகுதியில் ஆடு / மாடு அறுக்கும் தொட்டியினை S. விஜயன் என்பவர் ரூபாய்
1,81,700 க்கு ஏலம் எடுத்திருந்தார். இருப்பினும் ஆடு-மாடு அறுப்புத் தொட்டி குத்தகைதாரர் - இறைச்சி வணிகர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், குத்தகைதாரர் - தனது குத்தகையை ரத்து செய்து கொண்டார். இரண்டாவது
முறையாக ஜூலை 2 அன்று இவ்வினம் ஏலம் விடப்பட்டது. அப்போது இவ்வினத்தை எவரும் ஏலம் எடுக்கவில்லை.
மே மாதம் 29 ம் தேதி ஏலம் விடப்பட்ட பேருந்து நிலையத்தில் பேருந்து நுழைவு கட்டணம் வசூல் செய்யும்
உரிமத்தை R.S. கோபால் என்பவர் ரூபாய் 90,000 க்கு ஏலம் எடுத்திருந்தார். ஏலத் தொகையை அவர் கட்டாத காரணத்தால், அவரின் ஏலம் ரத்து
செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக ஜூலை 2 அன்று இவ்வினம் ஏலம் விடப்பட்டது. அப்போது இவ்வினத்தை எவரும் ஏலம்
எடுக்கவில்லை.
மே மாதம் 29 ம் தேதி ஏலம் விடப்பட்ட ஓடைக்கரையில் உள்ள மச்ச ஓடை மீன் பிடி உரிமத்தை T.
நாராயண நாடார் என்பவர் ரூபாய் 25,000 க்கு ஏலம் எடுத்திருந்தார். அதற்கு முன்னர் - இவ்வினம் ரூபாய் 300 க்கு ஏலத்திற்கு சென்றிருந்தது.
இருப்பினும் ஏலத் தொகையை அவர் கட்டாத காரணத்தால், அவரின் ஏலம் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக ஜூலை 2 அன்று
இவ்வினம் ஏலம் விடப்பட்டது. அதனை குமார் என்பவர் ரூபாய் 510 க்கு தொகைக்கு ஏலம் எடுத்துள்ளார்.
மேலும் - தற்போது வெளியிடப்பட்டுள்ள ஏலம் குறித்த அறிவிப்பு, துண்டு பிரசூரங்கள் மூலம் நகர் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சைக்கிள் நிறுத்தம் குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் அவ்வினம் இது வரை
ஏலம் விடப்படவில்லை. பேருந்து நிலையத்தில் உள்ள சுகாதாரகூடப் பணிகள் நிறைவுறாமல் இருப்பதால் - அவ்வினமும் இது வரை ஏலம்
விடப்படவில்லை.
|