இலங்கை தலைநகர் கொழும்புவில் இயங்கி வரும் இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் சார்பில், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி 01.08.2012 அன்று மாலை 05.30 மணிக்கு, கொழும்பு புகாரீ அன் கோ இல்லத்தில் நடைபெற்றது.
துவக்கமாக நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு மன்றத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் தலைமை தாங்கினார். மன்றச் செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் முன்னிலை வகித்தார். மன்ற உறுப்பினர் சுல்தான் என்பவரது மகன் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
அடுத்து, வந்திருந்த அனைவரும் முறைப்படி வரவேற்கப்பட்டனர். பின்னர், அண்மையில் நடைபெற்ற ரெயில் தீ விபத்தில் பலியான காயல்பட்டினத்தைச் சேர்ந்த வி.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் (வி.எஸ்.எம்.டி.முஹ்யித்தீன்) என்ற விளக்கு முஹ்யித்தீன் அவர்களின் மறைவிற்கு மன்றத்தின் சார்பில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டு, அவரது மறுமை நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.
பின்னர், இஃப்தார் - நோன்பு துறப்பு நேரம் நெருங்கும் வரை, நகர்நலன் குறித்த உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், காயல்பட்டினம் பாரம்பரிய கறி கஞ்சி, ரோஸ் மில்க் குளிர்பானம், ப்ரெட் சாலட் உள்ளிட்ட பலவகை பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
பின்னர், மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ தொழுகையை வழிநடத்தினார். அத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
தகவல் & படங்கள்:
ந.அப்துல் காதர்
கூடுதல் படங்கள்:
கலாமீ செய்யித் உமர்
காவாலங்கா சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |