குடும்ப அட்டை கோரி புதிதாக விண்ணப்பித்தோருக்கு குடும்ப அட்டை வினியோகிக்கப்படுவது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:-
தூத்துக்குடி மாவட்டத்தில், புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில், தகுதி வாய்ந்த மனுக்கள் அடிப்படையில் புதிய குடும்ப அட்டை அச்சிட்டு, அந்தந்த வட்ட அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
அவ்வாறு புதிய குடும்ப அட்டையைப் பெற்றுச் சென்றிடக் கேட்டு, மனுதாரருடைய முகவரிக்கு அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டு, முகவரியில் ‘குடியிருப்பில்லை‘ என்ற குறிப்புடன் அஞ்சல் அட்டை மீண்டும் வட்ட அலுவலகங்களுக்கு திரும்ப வரப்பெற்றிருந்தது.
அத்தகைய குடும்ப அட்டைகளின் விபரங்கள் அனைத்தும் தூத்துக்குடி மாவட்டத்திற்கான www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் http://www.thoothukudi.nic.in/files/new14.pdf என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அப்பட்டியலில் விண்ணப்பதாரருடைய பெயர் இடம்பெற்றிருப்பின், தற்போது வசித்து வரும் முகவரிக்கான வீட்டுத் தீர்வை ரசீது மற்றும் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தபோது வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டு முதலான ஆவண ஆதாரங்களுடன் மனுதாரரே நேரில் சென்று புதிய குடும்ப அட்டையை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களிடம் பெற்றுச் செல்லலாம் என விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
மனுதாரர் அல்லாத பிற நபர்களிடம் புதிய குடும்ப அட்டை வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட - காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வினியோகிக்கப்பட்டுள்ள புதிய குடும்ப அட்டைகளின் பட்டியல் பின்வருமாறு:-
|