காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலை, பிரதான வீதி, எல்.எஃப். வீதி, பெரிய நெசவுத் தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார் ஆகிய வீதிகள் மட்டுமே, காயல்பட்டினத்தில் பேருந்து போக்குவரத்திற்காக வரையறுக்கப்பட்ட சாலைகளாகும்.
இந்த வரையறைக்கு மாற்றமாக, 04.08.2012 அன்று மதியம் 03.40 மணியளவில் காயல்பட்டினம் புறவழிச் சாலை வழியே ராமநாதபுரம் - சாயல்குடி - தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் செல்லும் பேருந்து சென்றது.
இதுகுறித்து ஓட்டுநரிடம் விசாரித்தபோது, வண்டியில் பழுது ஏற்பட்டுள்ளதால் மாற்றுப்பாதையில் அவசரமாக செல்வதாக தெரிவித்தார். பழுதடைந்ததாக அவர் தெரிவித்த வாகனத்தில் பயணியர் சிலரும் அமர்ந்திருந்தது கேள்வியை எழுப்பியது.
பொதுவாக, காயல்பட்டினத்திற்குள் வந்து செல்ல வேண்டிய பேருந்துகள், அவ்வழியே செல்லாமல் அடைக்கலபுரம் வழியாக செல்வதும், ஆறுமுகநேரிக்குள் சென்று செல்ல வேண்டிய பேருந்துகள் அதனைப் புறக்கணித்துவிட்டு காயல்பட்டினம் புறவழிச்சாலை வழியாகச் செல்வதும் வழமையான நிகழ்வுகளாக மாறி வருவது கவனிக்கத்தக்கது. |