தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பொருளாளர் எம்.எச்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் உடைய சகோதரி ஹாஜ்ஜா எம்.எச்.முத்து செய்யிது அவர்கள் இன்று காலை 11.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 50.
அன்னார், ஹாஜி எஸ்.எம்.எஸ்.முஹம்மத் ஹஸன் என்பவரின் மகளும், மர்ஹூம் ஹாஜி குளவி ஸூஃபீ ஹுஸைன் என்பவரின் மருமகளும், ஹாஜி குளவி செய்யித் முஹம்மத் புகாரீ என்பவரின் மனைவியும், ஹாஜி கே.எஸ்.எம்.பி.ஸூஃபீ ஹுஸைன் என்பவரின் தாயாரும்,
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பொருளாளர் எம்.எச்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், அதன் உறுப்பினர்களான எம்.எச்.புகாரீ, எம்.எச்.அபுல் மஆலீ ஆகியோரின் சகோதரியுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று (07.08.2012) இரவு 10.30 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
2. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் posted byRuknudeen Sahib (China)[07 August 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 21099
அஸ்ஸலாமு அலைக்கும் எனது அன்பு நண்பர் மற்றும் நல்லுள்ளம் கொண்ட ஸாலிஹ் காக்கா அவர்களின் மூத்த சகோதரி அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் பொருட்டால் சகோதரி அவர்களின் பாவ பிழைகளை பொருத்து அன்னாரின் நற் செயல்களை ஒப்புக்கொண்டு ரமழான் மாதம் வந்து விட்டால் சொர்க்க வாயில்கள் திறக்கப்பட்டு நரக வாயில்கள் அடைக்கபடுகின்றன என்ற பூமான் நபியின் பொன்னான ஹதீதின் அடிப்படையில் சொர்கத்தை அன்னாருக்கு தங்குமிடமாக ஆக்கி அருள துஆ செய்வதுடன் அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு நல்ல பொறுமையும் நல்ல மன தைரியத்தையும் எல்லாம் வல்ல கிருபையுள்ள ரஹ்மான் தந்தருள துஆ செய்கிறேன் வஸ்ஸலாம்.
3. Re:... posted byOMER ANAS (DOHA QATAR.)[07 August 2012] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 21100
இன்னாளில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஹூன்!
யா அல்லாஹ் மர்ஹூமாவின் பிழைகளை பொருத்து மேலான
சுவனப் பதியை கொடுப்பதோடு,மர்ஹூமாவை பிரிந்து வாடும் எனது சகலைக்கும்,மற்றும் எங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் சபூரை கொடுத்தருள்வாய் யா அல்லாஹ்!
அஸ்ஸலாமு அழைக்கும்!
4. Re:... posted byP S MOHIDEEN (Chennai)[07 August 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 21101
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் .
கருணை உள்ள ரஹ்மான் மர்ஹுமா வின் பாவங்கள்
அனைத்தையும் மன்னித்து , உயர்ந்த சொர்கத்தை அருள்வானாக .
அன்னாரின் குடும்பத்தார் அனைவோருக்கும் அழகிய பொறுமையை தருவானாக ..
7. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[07 August 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21104
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மிகவும் அதிர்ச்சியான செய்தி.
என்றும் சிரித்த முகம், எங்கு கண்டாலும் அகமுடன் சுகம் விசாரிக்கும் பண்பு, குடும்பத்தில் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு,குறிப்பிட்டு.. விசாரித்து துஆ செய்யும் மாண்பு.. !! சகோதரி ஒருவரை இழந்து விட்டேன்.
கடைசி வரை உடல் நலமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு, பொறுமையுடன் இருந்தார்கள். வல்ல ரஹ்மான் கண்டிப்பாக இவர்களின் பாவங்களை மன்னித்து இருப்பான். இன்ஷா அல்லாஹ் சுவனத்தில் நல்ல உயர்ந்த பதவியை அங்கீகரிப்பானாக.
குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ், அழகிய பொறுமையை கொடுப்பானாக..!!
10. MAY ALMIGHTY ALLAH FORGIVE HER SINS posted byABU AASIYA MARYAM (HONG KONG)[07 August 2012] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 21108
BISMILLAH...ASSALAMUALAIKUM WRWB.INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON."MAY ALMIGHTY ALLAH ACCEPT HER DEEDS,FORGIVE HER SINS AND HELP HER TO ENTER JANNATHUL FIRDOUS"
11. Re:...மரண செய்தி posted byP.S ABDUL KADER (JEDDAH,SAUDIA.)[07 August 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21109
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்..
15. السلام عليكم و رحمت الله و بركاته posted byAbdulKader ThaikaSahib (Riyadh, KSA)[07 August 2012] IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21116
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.
எங்களின் ஆருயிர் நண்பர்களான எம்.எச்.புகாரீ, எம்.எச்.அபுல் மஆலீ மற்றும் மர்ஹூமா அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்
السلام عليكم و رحمت الله و بركاته
M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு
17. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[07 August 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21120
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
என் அருமை உயிர் நண்பர்.ஹாஜி குளவி.புஹாரி அவர்களின் துணைவியார் அவர்கள் வபாத்து செய்தி அறிந்து எங்களின் மனதுக்கு மிகவும் வருத்தமானது. இந்த மிக அதிர்ச்சியான செய்தியை அறிந்து நாங்கள் மர்ஹுமா அவர்களின் ஹக்கில் துவா செய்து.மர்ஹுமா அவர்களின் பிழைகளை பொறுத்து அவனின் மிகவும் உயர்ந்த சிறப்பான ஜன்னத்துல் பிர்தவுஸ் என்னும் சுவன பதவியை கொடுத்து அருள்வானகவும் ஆமீன்.
தம் துணைவியை இழந்து தவிக்கும் என் அருமை உயிர் நண்பர்.ஹாஜி குளவி.புஹாரி அவர்களுக்கும் மற்றும் மர்ஹுமா அவர்களின் குழந்தைகளுக்கும் / குடும்பத்தார்களுக்கும் எங்களின் சலாத்தினை கூறி கொள்வதுடன். அவர்கள் யாவர்களும் பொறுமையை கடை பிடிக்கும் படி கேட்டு கொள்கிறோம்.
ஒரு வருசத்துக்கு முன்புதான் நான். என் நண்பன் + துணைவியார் மர்ஹுமா / மகன் இவர்களை சிறப்பான மக்கா ஹரம் ஷரிபில் சந்தித்தது போன்று என் கண் முன் தோன்றுகிறது.
என் நண்பரின் துணைவியார் மர்ஹுமா அவர்கள்.அவர்களின் தாய் வீட்டில் ஒரு தூன் போன்று தன் சகோதர / சகோதரிகளை மிகவும் சிறப்புடன் + ஒற்றுமையுடனும் முன் நின்று வழி நடத்தி சென்றவர்.ரொம்பவும் பொறுமைசாலியும் கூட.
இது மிக சிறப்பான ரமலான் மாதம் என்பதால் வல்ல நாயன் மர்ஹுமா அவர்களுக்கு அவனின் மிகவும் உயர்ந்த தர்ஜாவை கொடுத்து அருள்வானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AND
குடும்பத்தார்கள்
AL-KHOBAR
SAUDI ARABIA
18. இன்னா லில்லாஹி... posted byS.K.Salih (Kayalpatnam)[07 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21121
என் பாசத்திற்குரிய சகோதரர் ஸாலிஹ் காக்கா மற்றும் அவரது தம்பிமாரான எனதன்பு நண்பர்கள் புகாரீ, அபுல் மஆலீ ஆகியோரின் சகோதரியாரின் மறைவுச் செய்தி மனதை வாட்டியது.
செய்திப்பணிக்காக மருத்துவர் தெரு வழியே செல்கையில், அவர்கள் வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தே அன்னாரின் மறைவுச் செய்தியை துவக்கமாக அறிந்துகொள்ள முடிந்தது.
ஒரு சகோதரர் தெரிவித்துள்ளது போல, நல்ல மனதுடைய இவர்கள் சுகவீனத்தை இன்முகத்துடன் பொறுத்துக்கொண்ட காரணத்தால், அவர்கள் அறிந்தோ - அறியாமலோ செய்த பாவங்களைக் கரைத்திட அதுவே போதுமானதாக இருந்து விடட்டும்!
நம் உயிரினுமினிய கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து தனது நோய் குறித்து தெரிவித்துவிட்டு, இந்நோய் அகல இறையோனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்டபோது, “இந்நோயை நீவிர் பொறுமையுடன் சகித்துக்கொண்டால் - அதுவே உம் பாவம் கரைந்திட காரணமாகிவிடும்” என்ற கருத்தில் தெரிவிக்க, அப்பெண்மணியும் அதனை ஆவலுடன் ஏற்றுச் சென்ற சரித்திரத்தை இங்கே நினைவுகூர்வது பொருத்தமாகப் படுகிறது.
கருணையுள்ள அல்லாஹ், இப்பெண்மணியின் பாவப்பிழைகளனைத்தையும் பொறுத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் அவர்களையும், நம்மையும் நுழையச் செய்வானாக, ஆமீன்.
பொறுமையோடு, தன் நோயை பொருட்படுத்தாமல், வல்ல நாயனை வேண்டியவர்களாக, பல வருடம் சகித்துக்கொண்டிருந்த அருமை சகோதரி மர்ஹுமா முத்து செய்யது அவர்கள் , அல்லாஹ்வின் கலா கதரின் படி மறு உலக வாழ்வை அடைந்ததை அறிந்து மிகவும் வருந்துகிறோம். அருமை சகோதரர் சாளை ஜியாவுதீன் மற்றும் சகோதரர் S.K.S. அவர்கள் சொன்னது போல இந்த உலகிலேயே பிழை பொருக்கப்பட்டவர்களாக (இன்ஷா அல்லாஹ்), வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அந்த சகோதரியின் நல்ல சுகத்துக்காக சில வருடம் முன்பு நாங்கள் குடும்பம் சகிதம் புனித ஹரம் ஷரீபில் து ஆ இறைஞ்சிய நினைவு தான் இப்போது நிழலாடுகிறது. அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று மறுமை வாழ்வை அடைந்த அன்னாரின் இழப்பு, அவர்களின் குடும்பத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். எப்படி ஆறுதல் சொல்வதென்பதே தெரிய வில்லை. அன்னாரை பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தாரின் இதயங்களை வல்ல ரஹ்மான் , அழகிய பொறுமையை கொண்டும் இதமாக்கி வைப்பானாகவும். சப்ரன் ஜமீலா எனும் சிறந்த பொறுமையை வளங்குவானாகவும். அந்த குடும்பத்தாரின் ஆயுளை அல்லாஹ்வின் வழிபாட்டின் பேரில் நீளமாக்கி வைப்பானாகவும், ஆமீன்.
மறைந்த மர்ஹுமா அவர்களின் மண்ணறையை, சுவனத்து சுகந்தத்தை நுகரக்கூடிய விசாலமான பூங்கா வனமாக ஆக்கி வைப்பானாக ! நாளை மறுமையில் சுகதாக்கள் அந்தஸ்துடன் , பெருமானாரின் வசீலாவுடன் , மேலான உயரிய ஜன்னத்துல் பிர்தவ்சில் அஃலா எனும் சுவன பதி அடையச் செய்வானாகவும் ஆமீன்.
மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் அனைவரின் நற் ஸலாத்தினை சமர்பிக்கிறோம் . அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.
மிகவும் வருத்தத்துடன்,
K.V.A.T. குடும்பத்தினர்,
காயல்பட்டணம் & கத்தார்.
20. Re:...innalillahi wa inna ilaihi raaziwun posted byismail jeddah (Jeddah K.S.A.)[08 August 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21124
very shocking to hear the demise of my friend M.H.Salih`s sister may Almighty allah forgive her sins and accept all her good deeds and place her in ZANNATHUL FIRDOUS and give patience to all of my friend family members
22. Re:... posted byMauroof (Dubai)[08 August 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21128
இன்னாலில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்தும், நற்செயல்களை அங்கீகரித்தும் மேலான சுவனபதியை கொடுப்பதுடன் அவர்களின் மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்துக் கொடுப்பானாக என இருகரம் ஏந்துகிறேன்.
அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா என்ற மேலான பொறுமையை அல்லாஹ் வழங்கிடுவானாக - ஆமீன். குடும்பத்தினர் அனைவருக்கும் அஸ்ஸலாமுஅலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
24. Re:... posted byAbdul Cader S.H. (Kayalpatnam)[08 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21133
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ...
அருமை நண்பர் சாலிஹின் சகோதரியும், என் அன்பு மகளின் தோழியின் தாயாருமான சகோதரியின் மறைவு ஸ்கூலில் இருந்து அழுகையுடன் வந்து கூறிய என் மகளின் மூலம் அறிந்து, அதிர்ச்சியுற்றேன். நீண்ட காலமாக சுகவீனம் இல்லாமல் இருந்ததையும் தெரிந்து கொண்டு அன்னாரின் மறுமைக்காக துஆ செய்தேன்.
கருணையுள்ள வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களது பாவப்பிழைகளனைத்தையும் பொறுத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனபத்தியை தந்தருல்வானாக! ஆமின்.
மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் நற்சலாம் . அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross