காயல்பட்டினம் - ரத்தினபுரி ஏ.கே.எம். நகரில் இருந்து செயல்படும் துளிர் சிறப்பு
குழந்தைகள் பள்ளி சார்பாக ரமழான் மாத வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது:-
எனக்காக பலவீனமானோரைத் தேடுங்கள். ஏனெனில், உங்களில் உள்ள பலவீனமானோர் மூலமாகத்தான் உங்களுக்கான ஆகாரம் மற்றும் உதவி
ஆகியவை கிடைக்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற நான் செவியுற்றேன் - அபூதாவூத், திர்மீதி
புனித ரமழானில் பலவீனமான, இயலா நிலைக் குழந்தைகளுக்கு உதவுங்கள். அல்லாஹ்வின் அருளை பெறுங்கள் ...
எமது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்!!
துளிரின் புனித ரமழான் வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு வருடமும் நாங்கள் விடுக்கும் ரமழான் வேண்டுகோளை ஏற்று நீங்கள் உவப்புடன் உவந்தளித்த ஜகாத், சதகா நன்கொடைகளுக்கு மிக்க
நன்றி. புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு ஒவ்வொரு வருடமும் நீங்கள் தரும் பணம், பொருள் அனைத்தும் எமது துளிரின் வளர்ச்சியில் ஒவ்வொரு படிக்கற்களாகும். இதன் மூலம்
எமது துளிர் அடைந்துள்ள, அடைந்து வருகின்ற வளர்ச்சியும், முன்னேற்றமும் உங்கள் உதவிகளின் பிரதிபளிப்புகளேயாகும்.
துளிர் அறக்கட்டளையால் நடத்தப்படும், எமது துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி, மன வளர்ச்சிக் குறைபாடுள்ள மற்றும் மூளை முடக்கவாதத்தால்
பாதிக்கப்பட்டுள்ள 70 க்கும் மேற்பட்ட இயலா நிலைக் குழந்தைகளுக்கு சிறப்புக்கல்வி, சுய உதவி பயிற்சி, பேச்சு பயிற்சி, உடல் இயக்கப்பயிற்சி,
தொழில் முன் பயிற்சி, மருத்துவ உதவி போன்றவற்றை வழங்கி இப்பிஞ்சு குழந்தைகளின் வாழ்வு முன்னேற்றத்திற்கு வழிக்காட்டி வருகிறது.
மேலும், துளிர் தமிழகத்தில் இஸ்லாமியர்களால் நிர்வாகிக்கப்படும் ஒரே மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளி என்பதனையும் தெரிவித்து
கொள்கிறோம்.
துளிரின் சிறப்பாசிரியர்கள், பணியாளர்கள் - ஊதியம், மின்சார, தொலைப்பேசிக்கட்டணம், பள்ளி வாகன எரிப்பொருள் மற்றும் பராமரிப்பு செலவு,
நிர்வாக செலவுகள், மருத்துவ செலவுகள் மற்றும் இதர செலவீனங்களுக்காக மாதந்தோறும் 1,25,000/- தேவைப்படுகிறது. எமது பணிகள் தொடர
நேச கரங்களை நாடுகின்றோம். எனவே சென்ற வருடம் ரமழானில் நீங்கள் வழங்கியது போன்று இவ்வருடமும் உங்கள் ஜகாத், சதகா
நன்கொடைகளை மேலும் அதிகமாக வழங்கி, இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும், எங்களுக்கும்
கிருபை செய்வானாக ஆமீன். குறிப்பிட்டு வழங்கப்படும் ஜகாத் தொகை தனியாக கணக்கு வைக்கப்பட்டு மார்க்க அறிஞர்களின் ஆலோசனைப்படி
அதற்குரியவர்களின் நலனுக்காக மட்டும் பயன்படுத்தப்படும்.
அதோடு உங்களுக்கு வசதிப்படும் போது, ஒரு முறை எமது துளிருக்கு தனியாகவோ அல்லது குடும்பமாகவோ வருகை தந்து எமது
செயற்திட்டங்களையும், எமது துளிரின் பிஞ்சு குழந்தைகள் அடைந்துள்ள முன்னேற்றதினையும், பார்வையிட்டு உங்களது ஆக்கப்பூர்வமான
ஆலோசனைகளையும் எமக்கு வழங்கிடுங்கள். இத்தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எமது இதயப்பூர்வமான நன்றிகளைத்
தெரிவிக்கக்கடமைப்பட்டுள்ளோம். எல்லாம் வல்ல அல்லாஹ், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நலமான, வளமான வாழ்வையும்,
நீடித்த ஆயுளையும், அதிகமான செல்வதையும் இந்த ரமளானின் பொருட்டால் தந்தருள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.
நன்றி! வஸ்ஸலாம்!!
ஏ. வஹீதா, பி.எஸ்.சி.,
தலைவர், துளிர் மறுவாழ்வு திட்ட பணிகள்.
செல்பேசி: 98948 42238
எம்.எல். சேக்னா லெப்பை, பி.காம்.,
செயலாளர், துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி.
செல்பேசி: 89036 80650
ஹெச்.எம். அஹ்மது, பி.ஏ.,பி.,எல்.,
நிறுவனர்/பணிப்பாளர், துளிர் அறக்கட்டளை.
செல்பேசி: 93815 04445
விலாசம்:
30/1A ஏ.கே.எம். நகர்,
ரத்தினாபுரி,
காயல்பட்டணம் – 628204.
தூத்துக்குடி மாவட்டம்,
தமிழ் நாடு.
தொலைப்பேசி - +91 4639 284 662, 280 215
மின் அஞ்சல் – thulir2005@yahoo.co.in
மாகாண அலுவலகம்:
தரைதளம், KTMS டிரஸ்ட் பில்டிங்,
மாதிரி பள்ளி சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை – 600 006.
தொலைப்பேசி - +91 93806 33311, 94446 40300
இணையதளம்:
www.thulirtrust.org.in
உங்கள் சதகா, நன்கொடைகளை கீழ்கண்ட வங்கிக் கணக்குகளில் RTGS, NEFT வழியாக நேரடியாக செலுத்தலாம்.
Current Account: Thulir Trust
A/c No.2081265505
IFS Code: CBIN0280928
Central Bank of India,
Kayalpatnam.
Current Account: Thulir Trust
A/C No. 3024624465
IFS Code: CBIN0281426
Central Bank of India,
Royapettah, Chennai.
Cheque, DD அனுப்புகிறவர்கள் Thulir Trust என்ற பெயரில் அனுப்பலாம்
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|