கிருஷ்ணர் பிறந்தநாளாக கொண்டாடப்படும் ஜன்மாஷ்டமி தேதியில் குழப்பம் ஏற்பட்டதால் அரசு மாற்று ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை ஜன்மாஷ்டமி என்றும், நாளை தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை என்றும் தமிழக அரசின் தலைமை செயலாளர் தேபெந்த்ரநாத் சாரங்கி IAS இன்று அறிவித்தார்.
முன்னதாக - கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ம் தேதி வெளியிடப்பட்ட 2012 ம் ஆண்டுக்கான அரசு விடுமுறைகள் குறித்த தமிழக அரசின் அரசாணையில் - செப்டம்பர் 8 அன்று ஜன்மாஷ்டமி (கிருஷ்ணா ஜெயந்தி) என குறிப்பிடப்பட்டிருந்தது. பார்க்கவும் இங்கே. அதன் அடிப்படையில் பல நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள் தங்கள் விடுமுறைகளை அறிவித்திருந்தன.
ஜன்மாஷ்டமிக்கு இவ்வாண்டு சரியான தினம் - செப்டம்பர் 8 அல்ல, அக்டோபர் 9/10 ஆகிய தினங்கள் ஆகும். இந்த தவறான தேதி முன்னரே திருத்தப்படாததால் பல கல்வி நிலையங்களில் முன்னரே நாளைய தினம் (ஆகஸ்ட் 9) விடுமுறை அறிவிக்கப்படவில்லை. தற்போது அந்த தேதியை திருத்தி - புதிய அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross