இ.டி.ஏ. அஸ்கான் குழுமத்தின் கீழ் சென்னையில் இயங்கி வரும் ஸ்கை எக்ஸ் கொரியர் நிறுவனத்தில், நடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு தினமும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், அந்நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டல இயக்குநர் ஏ.பி.மொகுதூம் தலைமையில் - காயலர்கள் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் பணியாளர்கள் திரளாகக் கலந்துகொள்கின்றனர்.
அவர்களுக்கு தினமும் பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், கறி கஞ்சி, ரோஸ் மில்க் குளிர்பானம், வடை வகைகள், பஃப்ஸ், பழங்கள், பனிக்கூழ் (ஐஸ் க்ரீம்), இஞ்சி கலந்த தேனீர் ஆகிய உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்படுகிறது.
மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக - கூட்டாக நிறைவேற்றப்பட்ட பின்னர், அனைவருக்கும் இரவுணவாக மட்டன் பிரியாணி வழங்கப்படுகிறது.
07.08.2012 அன்று அந்நிறுவனத்தில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
தகவல் & படங்கள்:
ஹபீப் முஹம்மத் MPL |