சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான காயல்பட்டினம் புதிய குடிநீர் திட்டத்திற்கான டெண்டர் - ஜூலை 28 அன்று அறிவிக்கப்பட்டு, அதன் முழு விபரங்கள் தற்போது அரசு டெண்டர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சில முரண்பாடான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
1) ஜூலை 28 அன்று வெளியிடப்பட்ட நாளிதழ்கள் விளம்பரத்தில் - டெண்டர் திறப்புக்கு முன்னரான விளக்க கூட்டம் (Pre-Bid Meeting) ஆகஸ்ட் 23 அன்று காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் - டெண்டர் ஆவணம் - இது ஆகஸ்ட் 24 அன்று நடைபெறும் என கூறுகிறது
2) ஜூலை 28 அன்று வெளியிடப்பட்ட விளம்பரம் - மேலும் இந்த திட்டத்தினை 18 மாதங்களில் நிறைவேற்றவேண்டும் என தெரிவிக்கிறது. ஆனால் டெண்டர் ஆவணம் - சில இடங்களில் 18 மாதங்கள் என்றும், பிற இடங்களில் 24 மாதங்கள் என்றும் தெரிவிக்கிறது.
3) உள்ளூர் குடிநீர் விநியோக விசயத்தில், 6865 இல்லங்களுக்கு (House Service Connections) புதிய இணைப்புகள் வழங்கப்படும் என்றும் இந்த டெண்டர் ஆவணம் கூறுகிறது. ஆனால் நகரில் உள்ள இணைப்புகளோ - அதிகாரப்பூர்வமாக சுமார் 8100 என்று கூறப்படுகிறது. மீதி 1200 இணைப்புகள் நிலை?
இந்த குடிநீர் திட்டம் குறித்த அனைத்து விபரங்களையும் ஒரே பக்கத்தில் பார்க்க வசதியாக - சிறப்பு பக்கம் ஒன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை காண இங்கு அழுத்தவும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross