காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் வெயிலின் தாக்கத்தால் வெப்ப வானிலை பல மாதங்களாக நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. போதிய மழையின்மை காரணமாக காயல்பட்டினம் உள்ளிட்ட பல ஊர்களுக்கு குடிநீர் வினியோக அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மழை மீது பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்று காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில், ஜும்ஆ தொழுகையின்போது மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது. ஜும்ஆ தொழுகையை வழிநடத்திய அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, ஜும்ஆ தொழுகையில் - மழை வேண்டி குனூத் சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார்.
மழைப் பிரார்த்தனையை உள்ளடக்கிய இத்தொழுகையில் சுமார் ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டனர்.
1. Re:...மழை posted bymackie noohuthambi (kayalpatnam)[10 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21159
பருவ மழை தவறி விட்டது என்று மாநிலம் முழுவதும் கூப்பாடு போடுகிறார்கள். செயற்கை மழை உண்டாக்க பல கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு அதுவும் பலனில்லாமல் போய்விட்டது. அல்லாவின் கைவசம் உள்ள ஒரு விஷயத்தை மனிதர்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். பரிதாபம். ஊர்க்குருவி சில நேரம் தன்னை பருந்தென்று நினைதுக்கொள்ளுமாம்.
திங்களில் கால் வைத்தோம் இன்று செவ்வாயில் கால் வைத்துள்ளோம் என்று பெருமை பேசி கொள்கிறோம்.கோடிக்கணக்கான மக்களுக்கு குடிநீர் வசதி செய்யமுடியவில்லை. ஏனென்றால் இது விஞ்ஞானத்தால் செய்ய முடியாது. மெய்ஞானம் அல்லாஹ்வின் அருட்கொடையை நோக்கி நமது பயணம் அமையவேண்டும். நமது ஆட்சியாளர்களும் நாம் ஒவ்வொருவரும் செய்யும் தவறான செய்கைகளினால்தான் இறைவன் மழையை தடுத்தி நிறுத்தியுள்ளான். அவனுக்கு தெரியும் கடைசியாக முட்டி மோதி நம்மிடம்தான் வரவேண்டும் மனிதன் வருகிறானா என்று எதிர்பார்க்கிறான். இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. ஆலிம் அவர்கள் பிரார்த்தனைக்கு பிறகு சற்று மேக மூட்டம் காணப்படுகிறது. எல்லா பள்ளிகளிலும் இதை செய்திருக்க வேண்டும் ஐந்து வேளை தொழுகையிலும் தராவீஹு தொழுகையிலும் கேட்கவேண்டும்.
கண்மணி நாயகம் காட்டி தந்த இன்னொரு வழியையும் உலமாக்கள் சொல்கிறார்கள். ஆடு மாடுகள் சிறுவயது குழந்தைகள் முதியவர்கள் இவர்களையும் கூட்டிக்கொண்டு ஒரு பெருந்திடலில் நின்று தொழுது து ஆ கேட்க வேண்டுமென்று . அதையும் நாம் செய்ய முயன்றால் அதன் மூலமாகவும் மழை வருமே. அல்லாஹ் பெரும் கொடையாளன். அவனது கோபத்தைவிட அவனது கருணை முந்திகொண்டது. எனவே நமது பாவங்களை நினைத்து வருந்தி அவனிடம் மன்னிப்பு கேட்டால் நிச்சயம் அவன் மன்னித்து மழையை பொளியசெய்வான்.புனித ரமளானில் நாம் செய்யும் நற்செயல்களை அவன் பொருந்தி கொள்வானாக நமது கெட்டி தனத்தால் மழை பொழிய வைக்க முடியும் என்று யாராவது எண்ணினால் .அது வெறும் பைத்தியக்காரத்தனம்.
3. Re:... posted bySEYED ALI (ABUDHABI)[10 August 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21162
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தியாகணும்.
நம் சுயனலத்தவறுகளால் இறைவனின் அருட்கொடையாம் காடுகள் மரங்கள் என்று அழித்து ஒழித்தோம். ஆற்று படுகைகளில் மணல் கொள்ளை. ஆறு குளங்கள் என அத்தனையும் கழிப்பிடங்களாகிவிட்டன. இப்படியே ஒருபக்கம் தவறுகள் செய்துகொண்டே ஆண்டவனிடம் கையேந்துவது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற மாதிரிதான்.
இறைவன் மாபெரும் கிருபை உடையவன். அதே சமையம் மகா கோபக்காரன் என நாம் அறியவில்லையா. வீடு கட்டுங்கள், தொழிற்ச்சாலை உண்டாக்குங்கள். அதே சமயம் மரங்களை அழிக்காதீர்கள். ஒரு காலத்தில் காயல்பட்டினம் கடற்க்கரை தன்னை சுற்றிலும் அழகிய பட்டடை உடுத்தியது போல் அடர்ந்த பனைமரச்சோலையை உடுத்தி இருந்தது. அதை உரித்து அம்மணமாக்கி இப்படி கருவேல முள் போர்வையை அதற்க்கு போர்த்திவிட்டவர்கள் யார்.?
4. அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...ஆலமெல்லாம் அழகாய்ப் படைத்தோனே...!!! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[10 August 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21163
குடிநீர் தட்டுப்பாடு செய்தி அறிந்ததும் நான் என் கருத்துப் பதிவில் மழைக்கு வேண்டி அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்புப் பிரார்த்தனை (தொழுகை) நடத்தும் படி வேண்டியிருந்தேன். தற்போது சிறிய குத்பா பள்ளி துவங்கியிருக்கும் இப்பிரார்த்தனை பரவலாக அனைத்துப் பள்ளிகளிலும் நடத்தி அல்லாஹ்வின் அருளான நல் மழையைப் பெற்று வளமுடன் வாழ்வோமாக! ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross