தம்மாம் காயல் நற்பணி மன்றம் நடத்தும் பள்ளிகளுக்கிடையிலான அறிவியல் கண்காட்சி - ஆகஸ்ட் 25 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
காயல் நற்பணி மன்றம் தம்மாம் நடத்தும் மாபெரும் அறிவியல் கண்காட்சி - 2012
இடம்: எல்.கே மெட்ரிக் பள்ளி
நாள்: ஆகஸ்ட் 25 - சனிக்கிழமை
தம்மாம் காயல் நற்பணி மன்றம் தன் சிறப்பு திட்டத்தின் (Special Projects) கீழ் நம் நகரின் மாணவ, மாணவிகளின் அறிவியல் திறமையை
ஊக்குவிக்கும் வண்ணம் கடந்த ஆண்டு முதல் மாபெரும் அறிவியல் கண்காட்சியை நடாத்தி வருவதை தங்கள் அனைவரும் அறிவீர்கள். கடந்த ஆண்டு ஜலாலியா நிக்காஹ் மஜ்லிசில் வைத்து காயல்பட்டண அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான ஒரு மாபெரும் அறிவியல் கண்காட்சியும் மற்றும் அதனைத் தொடர்ந்து அறிவியல் விளக்கப் பயிற்சி ஒன்றும் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதன் தொடர்ச்சியாக 25-08-2012 அன்று எல்.கே.மெட்ரிக் பள்ளியில் வைத்து மாபெரும் அறிவியல் கண்காட்சி (SciX-2012) இன்ஷாஅல்லாஹ் நடைபெற உள்ளது.
இந்த அறிவியல் கண்காட்சியில் காயல் பட்டணத்தை சார்ந்த அனைத்து பள்ளிகளும் சிறப்பாக பங்கு கொண்டு தங்கள் பள்ளியின் அறிவியல் திறனை
வெளிபடுட்ட காயல் நற்பணி மன்றம் தம்மாம் அன்புடன் வரவேற்கின்றது.
இன்ஷா அல்லாஹ், இந்த வருடம் முதல் இந்த அறிவியல் கண்காட்சியின் திறனை மேலும் வலுப்படுத்தும் வண்ணம் இக்கண்காட்சியானது இரண்டு
கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத்தில் அடுத்த வாரம் முதல் ஒவ்வொரு பள்ளியிலும் அதன் மாணவர்களுக்கு இடையான அறிவியல்
கண்காட்சி (Intra-School Fair) நடைபெறும். அதில் வெற்றி பெரும் முதல் மூன்று காட்சிகள் வருகிற 25 ஆகஸ்ட் அன்று நடைபெறும்
பள்ளிகளுக்கு இடையான போட்டியில் (Inter-School Fair) கலந்து கொள்ள தகுதி பெறும்.
பள்ளிகளுக்கு இடையான கண்காட்சியில் பங்கு பெற்று தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முதல் மூன்று அறிவியல் படைப்புகளுக்கு தகுதியான பரிசுகளை
தம்மாம் காயல் நற்பணி மன்றம் வழங்கி சிறப்பிக்க உள்ளது. மற்றும் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு சான்றிதழ்கள்
வழங்கப்படும்.
பள்ளிகளுக்குள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று காட்சிகளுக்கு முறையே ரூபாய் 750, 500, 250 பரிசும், பள்ளிகளுக்கு
இடையான போட்டியில் வெற்றி பெறும் மூன்று காட்சிகளுக்கு முறையே ரூபாய் 2500, 2000, 1500 பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும் சுழற்கோப்பையும்
வழங்கப்படும்.
வெளியூர் மற்றும் வெளிநாட்டில் படிக்கும் காயல் மாணவ மாணவிகளும் இந்த கண்காட்சியில் பங்குபெறலாம். முதலில் வரும் நான்கு
விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளபடும்.
மேலதிக விபரங்களுக்கு M. செய்யது முஹைதீன் (98948 60429) என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஜெ. செய்யத் ஹசன்,
தம்மாம். |