காயல்பட்டின மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான புதிய குடிநீர் திட்டத்திற்கான டெண்டர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 28 கோடியே, 30 லட்சத்து, 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டம் மத்திய அரசின் UIDSSMT (Urban Infrastructure Development Scheme for Small and Medium Towns) திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படவுள்ளது. மொத்த திட்ட தொகையில் 80 சதவீதம் மத்திய அரசும், 10 சதவீதம் மாநில அரசும், 10 சதவீதம் காயல்பட்டினம் நகராட்சியும் பங்களிக்கும்.
மத்திய அரசின் பங்கான சுமார் 23.8 கோடி ரூபாயில், ரூபாய் 11.86 கோடி ரூபாயை மத்திய அரசு - முதல் தவணையாக வழங்கியுள்ளது. காயல்பட்டினம் நகராட்சியின் பங்கு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கும்.
இந்த குடிநீர் திட்டம் குறித்த அனைத்து விபரங்களையும் ஒரே பக்கத்தில் பார்க்க வசதியாக - சிறப்பு பக்கம் ஒன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை காண இங்கு அழுத்தவும் |