Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:13:18 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8886
#KOTW8886
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 13, 2012
ரமழான் 1433: இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் ஏழைகளுக்கு நோன்பு கால இலவச அரிசி வினியோகம்! 1350 பேர் பெற்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2951 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - காயல்பட்டினம் நகர கிளை சார்பில் வினியோகிக்கப்பட்ட - ஏழைகளுக்கான நோன்பு கால இலவச அரிசியை, 1350 ஏழைகள் பெற்றுச் சென்றனர். விபரம் பின்வருமாறு:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், ஆண்டுதோறும் ரமழான் மாதத்தின் ஒரு நாளில், ஏழைகளுக்கான ரமழான் கால இலவச அரிசி வழங்கப்படுவது வழமை. அந்த அடிப்படையில், நடப்பாண்டு ரமழான் மாத இலவச அரிசி வினியோகம், 12.08.2012 அன்று (நேற்று) மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - கட்சியின் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸிலில் நடைபெற்றது.

நகர முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.மீராசா சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, ஏழைகளுக்கான நோன்பு கால இலவச அரிசி வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.







கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.கே.மஹ்மூத் சுலைமான் மற்றும் எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், நகர பிரமுகர்களான ஹாஜி எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, பெத்தப்பா சுல்தான், ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஹாஜி எஸ்.டி.கமால், ஆசிரியர் மு.அப்துல் ரசாக், அரபி ஷாஹுல் ஹமீத், ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, எம்.இசட்.சித்தீக், பிரபு எம்.எஃப்.செய்யித் அஹ்மத், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முஸ்லிம் லீக் முன்னாள் உறுப்பினர் எம்.கே.எஸ்.கிதுறு ஃபாத்திமா ஆகியோர் ஏழைகளுக்கு இலவச அரிசியை வழங்கினர்.









இந்நிகழ்ச்சியில், ஒரு நபருக்கு 1.5 கிலோ அரிசி என்ற கணக்கில் இலவச அரிசி வினியோகிக்கப்பட்டது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த 1350 ஏழைகள் அரிசியைப் பெற்றுச் சென்றனர்.

வினியோக ஏற்பாடுகளை, நகர நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் - முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் மற்றும் மாணவரணியினரான ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், எஸ்.எஸ்.ஜெய்னுல் ஆப்தீன், ஜெ.எம்.நூஹுத்தம்பி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.



படங்களில் உதவி:
M.ஜஹாங்கீர்
மற்றும்
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


[செய்தி திருத்தப்பட்டது @ 3:00 pm / 12.8.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. திருத்தம் தேவை
posted by shahulhameed sak (malaysia) [13 August 2012]
IP: 49.*.*.* Malaysia | Comment Reference Number: 21225

13350 , 1350 என்று உள்ளது எது சரி

Administrator: செய்தி திருத்தப்பட்டது. 1350 என்பதே சரி. நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [13 August 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21226

Greetings

Really appreciable one.During the time of distributions please don't show in the picture.Those who are obtained the foods. .My humble request is avert such things.Your service is always welcome.

Best regards

Salai Syed Mohamed Fasi
AL Khobar Saudi Arabia


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [13 August 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21232

பாராட்டுக்கள். ஏழைகளின் துயர் துடைக்கும் சேவை. தொடரட்டும்.

கூடவே, இப்படி நேரில் வராமல், கூச்ச உணர்வோடும், உதவிகள் பெறுவதற்கு வெட்கப்படும் ஏழைகள் பலர் நம்மைச்சுற்றி இருக்கின்றார்கள். அவர்களை இனம்கண்டு, யாரும் அறியாமல் கொடுக்கலாமே.. (கொடுத்து இருப்பீர்கள்.!!)

ஆசிரியர் அப்துல் ரஜாக் அவர்களே, என்ன... ஒரே பெண்மணிக்கு இத்தனை அரிசி பொட்டலம் மொத்தமாக கொடுக்கின்றீர்கள், தெரிந்த பெண்மணியோ..!!

நல்லா கொடுங்க..நன்மையை வாங்குங்க வல்லோனிடம் இருந்து.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ..
posted by smart Abdul cader (chennai) [13 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21238

Before you do anything check your intention(Niyyah)And ask yourself before perfoming an action IS IT FOR THE SAKE OF ALLAH?

The reward of deeds depend up on the intentions and every person will get the reward according to what he has intended.So whoever emigrates for worldly benefits or for a women to marry, his emigration will be for what he emigrated for.

Shaheehul Buhari:1907 Nasai :3437 Abu dawood :2201 Ibnu maaja :4227 Tirmithi :1647 All the members giving pose for a snap.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok) [13 August 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 21242

அஸ்ஸலாமு அழைக்கும்

இ.யூ.முஸ்லிம் லீக் வாழ்த்துக்கள்

வலது கை நாள் குடுப்பது இடது கைகு தெரியகூடாது இப்படி ஒரு ஹதீஸ் இருக்கு டூ நினைக்கிறான்

நீங்கள் உதவி செயுங்கள் படத்தை போட்டு விளம்பர படுத்த தீர்கள் அல்லா உங்களுக்கு ரஹ்மது செய்வானாக

இப்படிக்கு
Seyed Mohamed (Sayna)
Kayal Ikiya Mandram
Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by T.M.R. MARZOOK (KAYALPATNAM) [13 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21250

முஸ்லிம் லீக் சேவை தொடர ஏன் நல்வாழ்த்துக்கள் மர்சூக் கஎதேமிள்ளத் பேரவை ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by suhail ibrahim (kayalpatnam) [14 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21253

அஸ்ஸலாமு அழைக்கும். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தொடரும் பணிஹல் தொடரட்டும். இதை போன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை மற்றும் அதன் சார்பு அணிகள் அனைத்தும் பல செயல்களை போட்டோ எடுக்காமல் பல செயல்கள் செய்ஹின்றனர். ஆனால் சில காரியங்களை வெளிப்படையாக செய்கின்றனர். அவ்வாறு செய்தல்தான் நம்மக்களுக்கு முஸ்லிம்லீக் தெரிகிறது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
என்று நோன்பு பெருநாள் (1433)?  (13/8/2012) [Views - 3424; Comments - 12]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved