காயல்பட்டினம் அம்பல மரைக்கார் தெரு, சதுக்கைத் தெரு, நெய்னார் தெரு ஆகிய தெருக்களை அணைத்தவாறு அமைந்துள்ளது அல்ஜாமிஉல் கபிர் - பெரிய குத்பா பள்ளிவாசல்.
காயல்பட்டினம் சித்தன் தெரு, அம்பல மரைக்கார் தெரு, நெய்னார் தெரு ஆகிய தெருக்களை அணைத்தாற்போல் அமைந்துள்ளது அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளிவாசல்.
இவ்விரு பள்ளிகளும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. தலைவராக (முத்தவல்லியாக) இருந்த ஹாஜி எஸ்.ஏ.ஷேக் மதார் அவர்கள் 26.04.2012 அன்று காலமானதையடுத்து, கடந்த மாதம் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், புதிய தலைவராக ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், துணைத் தலைவராக ஹாஜி குளவி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர், செயலாளராக ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவ்விரு பள்ளிகளிலும் நோன்புக் கஞ்சி தயாரிப்பு உள்ளிட்ட ரமழான் சிறப்பேற்பாடுகளைக் கவனிப்பதற்காக தனித்தனி குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விரு பள்ளிகளிலும் தினமும் மாலையில் ஊற்றுக்கஞ்சியும் வினியோகிக்கப்படுகிறது. இதனை, இப்பள்ளிகளின் மஹல்லாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர்.
ரமழானில் தினமும் மாலையில் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், குத்பா பெரிய பள்ளியில் சுமார் 50 பேரும், சிறிய குத்பா பள்ளியில் சுமார் 30 முதல் 50 பேரும் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு - பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், வடை வகைகள் பரிமாறப்படுகின்றன.
04.08.2012 அன்று, சிறிய குத்பா பள்ளியில் நடைபெற்ற .இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
06.08.2012 அன்று, குத்பா பெரிய பள்ளியில் நடைபெற்ற .இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
இவ்விரு பள்ளிகள் குறித்த வரலாற்று விபரங்களை அறிந்திட இங்கே சொடுக்குக! |