ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று - நாளை இந்திய சுதந்திர தினம் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தன்று, ப்ளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட தேசியக் கொடியைப் பயன்படுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பின்வருமாறு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்:-
ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் ப்ளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சீர் கேடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைககளை எடுத்து வருகிறது.
40 மைக்ரான் தடிமனுக்குக் கீழுள்ள ப்ளாஸ்டிக் பைகளை விற்பதோ, பயன்படுத்துவதோ, கடைகளில் இருப்பு வைப்பதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, வரும் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறவுள்ள - நாட்டின் 66ஆவது சுதந்திர தின விழாவில், ப்ளாஸ்டிக்கால் ஆன மூவர்ண தேசியக் கொடியை அரசு சுதந்திர தின விழா மற்றும் பள்ளி வளாகத்தில் நடைபெறும் சுதந்திர தின விழா, அரசு சாரா நிறுவனங்களின் சார்பில் நடத்தப்படும் சுதந்திர தின விழாவில் பயன்படுத்தக் கூடாது. துணிகளினால் ஆன மூவர்ண தேசியக் கொடியைப் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். |