இந்தியாவின் 66ஆவது சுதந்திர தின விழா இன்று நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் இன்று காலை 10.15 மணிக்கு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
கட்சியின் நகரப் பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் விழாவிற்குத் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மவ்லவீ ஹாஃபிழ் கத்தீப் அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ என்ற வெள்ளை வேஷ்டி ஆலிம் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். முஸ்லிம் லீக் நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் இந்திய தேசிய கொடியை ஏற்றினார்.
பின்னர், மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர துணைச் செயலாளர் ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நகர துணைச் செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை நன்றி கூற, துஆ - நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர், அரபி ஷாஹுல் ஹமீத், எஸ்.ஆர்.ரஹ்மத்துல்லாஹ், ஜெ.உமர், ஜெ.சுல்தான், பிரபு இஸ்மாஈல், கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை உள்ளிட்ட கட்சியின் நகர - மாவட்ட நிர்வாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். |