இந்தியாவின் 66ஆவது சுதந்திர தின விழா இன்று நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், இன்று காலையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரும், அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் தலைவருமான ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் விழாவிற்குத் தலைமை தாங்கி, இந்திய தேசிய கொடியை ஏற்றினார்.
பள்ளி துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், தலைமையாசிரியர் ஸ்டீஃபன், மாஸ்டர் பஷீருல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
K.M.T.சுலைமான் |