காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் சார்பில், 13.08.2012 அன்று மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி செயலாளர் ஹாஜி எஸ்.எம்.கபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், அதன் செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், இணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத், ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், குருவித்துறைப் பள்ளி செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.இஸ்மாஈல், தாயிம்பள்ளி - சீதக்காதி நினைவு நூலகத்தின் தலைவர் எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப், ரியாத் காயல் நற்பணி மன்றத் தலைவர் எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன், அதன் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், அதன் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உட்பட நகரின் பெரும்பாலான ஜமாஅத் நிர்வாகிகளும், நகரப் பிரமுகர்களும், பொதுமக்களும், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் இந்நாள் - முன்னாள் மாணவர்களும் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணிர் பாக்கெட், பிரியாணி கஞ்சி, குளிர்பானம், வடை, ரோல்ஸ், கட்லெட், பழங்கள், பனிக்கூழ், சிக்கன் 65 என பல உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
நிறைவில், அங்கேயே மஃரிப் தொழுகை ஜமாஅத்துடன் - கூட்டாக நிறைவேற்றப்பட்டது. தொழுகை நிறைவுற்ற பின் அனைவருக்கும் தேனீர் உபசரிப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ தலைமையில், ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், ஹாஜி எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ. ஹாஜி என்.டி.ஷெய்க் மொகுதூம், ஹாஃபிழ் ஏ.எச்.நஸ்ருத்தீன், ஹாஜி எம்.என்.எல்.சுலைமான் லெப்பை, ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப் உட்பட நிறுவனத்தின் பொறுப்பாளர்களும், ஆசிரியர்களும் செய்திருந்தனர். |