காயல்படடினம் குத்துக்கல் தெரு - காட்டு தைக்கா தெரு கீழ்ப்பகுதி ஆகியவற்றை அணைத்தாற்போல் அமைந்துள்ளது முஹ்யித்தீன் பள்ளிவாசல்.
ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ இப்பள்ளியின் தலைவராகவும், ஹாஜி எம்.எம்.சுல்தான் செயலாளராகவும் சேவையாற்றி வருகின்றனர்.
மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ பள்ளியின் இமாமாகவும், எஸ்.எம்.முஹம்மத் மக்கீ பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.
பழுது மற்றும் இட நெருக்கடி காரணமாக இப்பள்ளியின் பழைய கட்டிடம் முற்றிலும் அகற்றப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடப் பணிகள் நடைபெறும் வரை பள்ளியோடு ஒட்டியுள்ள - பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட மஜ்லிஸுல் கரம் சங்க வளாகத்தில் ஐவேளைத் தொழுகை நடைபெற்று வந்தது. தற்சமயம், பள்ளியின் தரை தள கட்டிடப் பணிகள் ஓரளவுக்கு நிறைவுற்றுள்ளதால், அனைத்து செயல்பாடுகளும் புதிய கட்டிடத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது.
முதல் தள கட்டிடப் பணிகள் மற்றும் பள்ளி வெளி வளாகப் பணிகள் நிறைவுற இன்னும் கால அவகாசம் எடுக்கும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு நோன்புக் கஞ்சி தயாரிப்பு உள்ளிட்ட ரமழான் சிறப்பேற்பாடுகளை, ஹாஜி எஸ்.என்.ஷேக் அப்துல் கரீம் தலைவராகவும், ஜெ.ஓ.முஹம்மத் உமர் செயலாளராகவும், கத்தீப் முத்து மொகுதூம், ஹாஜி எஸ்.டி.கமால் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்து கவனித்து வருகின்றனர்.
நடப்பாண்டு ரமழானில், கறி கஞ்சி தயாரிக்க நாளொன்றுக்கு ரூபாய் 8,000 தொகையும், வெண்கஞ்சிக்கு ரூபாய் 6,000 தொகையும், பிரியாணி கஞ்சிக்கு ரூபாய் 10,000 தொகையும் உத்தேசமாக செலவிடப்படுகிறது.
தினமும் மாலை 03.00 மணியளவில் ஊற்றுக்கஞ்சி வினியோகிக்கப்படுகிறது. இதனை அந்த மஹல்லாவைச் சேர்ந்த சுமார் 150 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர்.
ரமழானில் தினமும் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், 60 முதல் 80 பேர் வரை பங்கேற்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், நோன்புக் கஞ்சி, குளிர்பானம், வடை வகைகள் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகிறது.
15.08.2012 அன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள்:-
இப்பள்ளி குறித்த பழைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |