நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, இன்று மதியம் 02.00 மணியளவில் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில், உளத்தூய்மையைத் தூண்டும் தர்பிய்யா - சுய பரிசோதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிறுவனத்தின் செயலாளர் எஸ்.எச்.ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.எஸ்.) இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். இறையச்சம், சுய கட்டுப்பாடு, ஒழுக்க மாண்புகள் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது.
இந்நிகழ்ச்சியில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், அதன் நிர்வாகிகளான ஹாஜி எஸ்.இப்னு ஸஊத், எம்.என்.எம்.ஐ.மக்கீ உட்பட - காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.
|