காயல்பட்டினம் பிரதான வீதியில், ஆறாம்பள்ளித் தெருவை அணைத்தாற்போல் அமைந்துள்ளது மஸ்ஜிதுஸ் ஸாதிஸ் எனும் ஆறாம்பள்ளிவாசல். இப்பள்ளியின் பெயராலேயே அதனையொட்டிய தெரு ஆறாம்பள்ளித் தெரு என்றழைக்கப்படுகிறது.
ஹாஜி ஜெ.எஸ்.செய்யித் முஹம்மத் பள்ளியின் தலைவராகவும், ஹாஜி டூட்டி டாக்டர் மஹ்பூப் சுபுஹானீ, ஹாஜி ஏ.எச்.நெய்னா ஸாஹிப் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும், ஹாஜி மு.த.ஜெய்னுத்தீன் செயலாளராகவும், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் துணைச் செயலாளராகவும், ஹாஜி எஸ்.ஏ.கே.ஷேக் தாவூத் பொருளாளராகவும்,
ஹாஜி ச.த.சதக்கத்துல்லாஹ்,
ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்,
ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம்,
எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம்,
ஹாஜி என்.எம்.எஸ்.ஷாஹுல் ஹமீத்,
ஹாஜி கே.ஏ.ஷேக் அப்துல் காதிர்,
ஹாஜி டூட்டி அஹ்மத் ஸாஹிப்,
ஹாஜி ஜெ.எஸ்.முஹம்மத் அலீ,
ஹாஜி ஓ.ஷாஃபிஈ,
ஹாஜி எச்.எம்.எஸ்.அமானுல்லாஹ்,
ஹாஜி ஹஸன் இன்ஜினீயர்,
ஹாஜி செய்யித் முஹம்மத் (காரீ) ஆலிம்,
ரஃபீக்,
ஹாஜி செய்யித் மீரான்,
ஹாஜி டூட்டி சுஹ்ரவர்த்தி
ஆகியோர் பள்ளியின் செயற்குழு உறுப்பினர்களாகவும் பொறுப்பேற்று சேவையாற்றி வருகின்றனர்.
எம்.ஏ.செய்யித் இப்றாஹீம் பள்ளியின் இமாமாகவும், எம்.எச்.காழி அலாவுத்தீன் பிலாலாகவும், சி.எம்.கே.ஜலாலீ கணக்கராகவும், நஜ்முத்தீன் உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
வழமை போல நடப்பாண்டிலும், இப்பள்ளியில் கஞ்சி தயாரிக்கப்பட்டு, மாலையில் ஊற்றுக்கஞ்சி வினியோகம் செய்யப்படுகிறது. இதனை அந்த மஹல்லாவைச் சேர்ந்த சுமார் 100 குடும்பத்தினரும், வணிக நிறுவனங்களைச் சார்ந்தோறும் பெற்றுச் செல்கின்றனர்.
கஞ்சி தயாரிக்க நாளொன்றுக்கு பிரியாணி கஞ்சிக்கு ரூபாய் 10,000 தொகையும், கறி கஞ்சிக்கு ரூபாய் 8,000 தொகையும், கோழிக் கறி கஞ்சிக்கு ரூபாய் 6,500 தொகையும், காய்கறி கஞ்சிக்கு ரூபாய் 5,500 தொகையும், வெண்கஞ்சிக்கு ரூபாய் 4,500 தொகையும் உத்தேசமாக செலவிடப்படுகிறது.
இங்கு நடைபெறும் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் தினமும் 60 முதல் 100 பேர் வரை பங்கேற்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், கஞ்சி, வடை, அவ்வப்போது குளிர்பானம் பரிமாறப்படுகிறது.
16.08.2012 அன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
தகவல் & படங்கள்:
சாளை அப்துல் காதிர் (ஹாங்காங்),
ஆறாம்பள்ளித் தெரு, காயல்பட்டினம்.
குறிப்பு:நகர பள்ளிவாசல்களின் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் அடங்கிய செய்தித் தொடர் இத்துடன் நிறைவுற்றது. |