எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் ஏழை மக்களுக்கான ஃபித்ரா உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி இன்று இரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் அமைந்துள்ள தமுமுக அலுவலகத்தில் வினியோகிக்கப்பட்டது.
அரிசி, சீனி, தேங்காய், மைதா மாவு, ஜவ்வரிசி, எண்ணெய், மசாலா பொருட்கள் என ரூபாய் 104 மதிப்பிலான சமையல் பொருட்கள் அடங்கிய பொதி, 150 ஏழைப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
தமுமுக தம்மாம் மண்டல பொறுப்பாளர் ஹாஜி இம்தியாஸ், நகர கிளை தலைவர் ஜாஹிர், மருத்துவரணி மாவட்ட செயலாளர் கே.முஹ்ஸின், நகர செயலாளர் ஃபிர்தவ்ஸ், மருத்துவரணி நகர செயலாளர் எம்.ஏ.முஜீபுர்ரஹ்மான், செய்யித் இப்றாஹீம் ஆகியோர் சமையல் பொருட்பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.
|