சூரியன் என்றும் மறையாத இடத்தில ரமழான் மாதம் எவ்வாறு அனுஷ்டிக்கப்படுகிறது என்பது பற்றி பி.பி.சி. (BRITISH BROADCASTING CORPORATION) செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது.
பி.பி.சி.யின் செய்தியாளர் மார்க் போஸ்வோர்த் - பின்லாந்த் நாட்டின் ரோவனிஎமி என்ற ஊரில் இருந்து இச்செய்தியினை வழங்கியுள்ளார். அதன் தமிழாக்கம்
வருமாறு:-
உலகெங்கும் வாழும் மார்க்கத்தை கடைபிடிக்கும் முஸ்லிம்கள் ரமழான் மாதத்தை அனுஷ்டித்து வருகின்றனர். ஒரு மாதத்திற்கு, அவர்கள், சூரியன்
உதிப்பதிற்கு முன்னர் முதல், சூரியன் மறையும் வரை - நோன்பு பிடித்து வருகின்றனர். ஆனால் சூரியன் என்றும் மறையாத ஊரில் முஸ்லிம்கள்
என்ன செய்கிறார்கள்?
பின்லாந்த் நாட்டில் உள்ள ரோவனிஎமி ஊர் - இரு புறக்கோடிகளில் உள்ளது.
ஆர்க்டிக் வளையத்திற்குள் 66 டிகிரி வடக்கில் இவ்வூர் - பின்லாந்தின் லாப்லாந்து பகுதியில் உள்ளது. குளிர் காலத்தின் நடுவில் - இந்நகரம் முழு
நாளும் இருளிலேயே இருக்கும். ஆனால் கோடைக்காலத்தில் - இவ்வூர் முழுநாளும் வெளிச்சத்திலேயே இருக்கும்.
நீளமான நாட்கள் - நோன்பு பிடிக்கும் ஷாஹ் ஜலால் மியாஹ் மசூத் போன்றவர்களுக்கு குறிப்பாக கஷ்டமான விசயமாகும்.
28 வயதை நிரம்பிய இவர் - தகவல் தொழில்நுட்பம் பயில ஐந்தாண்டிற்கு முன்னர் - பங்களாதேஷ்-இல் இருந்து, பின்லாந்த் தலைநகர் ஹெல்சின்கிக்கு 830 கிலோமீட்டர் வடக்கில் உள்ள ரோவனிஎமி-இல் குடி பெயர்ந்தார். அவர் 21 மணி நேரமாக தொடர்ந்து உணவு உண்ணாமலும், நீர் பருகாமலும் உள்ளார். அதுகுறித்து அவர் சிரிக்கிறார்.
"இங்கு இருள் வருவதில்லை. எப்போதும் ஒரே போல் (வெளிச்சமாக) தான் காட்சியளிக்கிறது. அடிவானத்தில் எப்போதும் சூரியன் இருக்கிறது.
இப்போது எத்தனை மணி என கூற மிகவும் கடினம் ஆகும்" என அவர் கூறுகிறார்.
தற்போது மாலையில் 11 மணி. இப்போது தான் - சூரியன் அடிவானத்தில் இருந்து சற்று கீழே இறங்கியுள்ளது. வானம் அழகான, ஆழமான
நீல வர்ணத்திற்கு மாறியுள்ளது. இன்னும் 5 மணி நேரத்தில் சூரியன் மீண்டும் உதிக்கும்.
பின்லாந்த் நாட்டின் நேரப்படி நோன்பு வைப்பது கஷ்டம் என மசூத் கூறுகிறார். மேலும் - தான் மிகவும் தளர்ந்து விடுவதாக கூறுகிறார்.
பசியிருந்தாலும், தளர்ச்சி ஏற்பட்டாலும் - பின்லாந்த் நாட்டின் நீளமான நாட்கள் அடிப்படையில் நோன்பு வைப்பது சந்தோசத்தை தருகிறது என அவர்
கூறுகிறார்.
பின்லாந்துக்கு தெற்கில் உள்ள நாடுகளில் சூரியன் உதித்து, மறையும் நேர அடிப்படையில் - குறைந்த மணி நேரத்திற்கு நோன்பு நோற்க மற்றொரு
வழியும் உள்ளது. Islam Society of Northern Finland அமைப்பின் தலைவர் மற்றும் உள்ளூர் இமாமான டாக்டர் அப்துல் மன்னன் - இது குறித்து இரு வேறு கருத்துக்கள் இருப்பதாக
தெரிவித்தார்.
எகிப்து நாட்டு அறிஞர்கள் - ஒரு நாளின் நீளம் 18 மணி நேரத்தை தாண்டினால், மக்காஹ், மதினா அல்லது அருகில் உள்ள இஸ்லாமிய நாட்டின்
நேரத்தை ஏற்றுக்கொள்ளலாம என் கூறுகிறார்கள் என டாக்டர் மன்னன் தெரிவிக்கிறார்.
சவுதி நாட்டில் உள்ள அறிஞர்களின் கருத்து - ஒரு நாள் எவ்வளவு நீளமாக இருந்தாலும், உள்ளூர் நேரத்தையே கடைப்பிடிக்க வேண்டும் என்பது.
பின்லாந்த் நாட்டில் உள்ள பெருவாரியான இஸ்லாமியர்கள் - மக்காஹ் நேரத்தையோ அல்லது அருகில் உள்ள இஸ்லாமிய நாடான துர்கி உடைய
நேரத்தையோ ஏற்றுக்கொள்கின்றனர்.
லாப்லாந் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டிருக்கும் நபீசா யாஸ்மினுக்கு - எப்போது நோன்பு வைக்கவேண்டும் என்ற முடிவினை
எடுப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து - ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் - தனது கணவர் மற்றும் இரு
குழந்தைகள் உடன் இவர் பின்லாந்த் வந்தார்.
இவரின் அகலமான சமையல் அறையில் உள்ள நிறைய வெள்ளை நிற அலமாரியிலும் இருந்து - வறுத்த வெங்காயம், மஞ்சள், மிளகாய் மற்றும்
சீரக வாசனை வருகிறது. அவரின் பாரம்பரிய இப்தார் உணவினை தயாரித்தவாறு - அவர், பின்லாந்த் நாட்டில் தனது முதல் ரமழான் மாதத்தை -
பின்லாந்த் நாட்டின் நேரப்படி, 20 மணி நேரம் உணவில்லாமலும், நீர் இல்லாமலும் இருந்து நோன்பு வைக்க எடுத்த முடிவை நினைவு கூறுகிறார்.
பங்களாதேஷில் 12 மணி நேர வெளிச்சத்திற்கும், 12 மணி நேர இருளுக்கும் பழக்கப்பட்ட எங்களுக்கு - இது மிகவும் கஷ்டமாக இருந்தது என அவர்
கூறுகிறார்.
"அதன் பிறகு நான் யோசித்தேன், இதனை தொடர முடியாது. மக்காவின் கால அட்டவனையை தான் நான் பின்பற்றவேண்டும். ஆனால் எனக்கு
கொஞ்சம் அச்சம் உள்ளது - இறைவன் இதனை ஏற்றுக்கொள்வானா என்று."
பின்லாந்துக்கு அகதிகளாக பல முஸ்லிம்கள் - குறிப்பாக சோமாலியா, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து - வருகிறார்கள். 2001 முதல்
பின்லாந்த் ஆண்டுக்கு 750 அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது. புதிதாக வருபவர்கள் - அரசாங்கத்தின் மறுவாழ்வு திட்டங்கள்படி - வடக்கு
எல்லையில் உள்ள ரோவனிஎமி போன்ற ஊர்களில் வாழ அனுப்பப்படுகிறார்கள்.
ரோவனிஎமியில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை - நீளமான நாட்கள் மட்டும் அல்ல. 60,000 மக்கள் வாழும் இவ்வூரில் இஸ்லாமிய
விதிகள் படி தயாரிக்கப்பட்ட ஹலால் உணவு விற்பனை செய்யும் கடைகள் ஒன்றும் கிடையாது. அருகில் உள்ள ஊரான ஔலு - 300 கிலோமீட்டர்
தூரத்தில் உள்ளது. மற்றொரு வழி - பக்கத்து நாடான ஸ்வீடனில் உள்ள லுலிய நகரம்.
யாஸ்மின் - தனது தேவையான பொருட்களை வாங்க, காரில் சென்று வர ஆறுமணி நேரம் எடுக்கும் லுலிய நகரத்தை தேர்ந்தெடுக்கிறார். அவரின்
தேவை பட்டியலில் - கருப்பு கொண்டக்ககடலை, பேரீத்தம்பழம், அரிசி மற்றும் நிறைய ஹலால் இறைச்சி உள்ளது.
ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் அவர் சேகரித்து வைத்துள்ளார். தனது குழந்தைகளின் பள்ளிக்கூட புகைப்படங்கள் ஒட்டப்பட்ட
மிகப்பெரிய வெள்ளை குளிர்சாதனைப்பெட்டியின் ஏழு தட்டிலும் அவர் சேமித்து வைத்துள்ள இறைச்சியினை அவர் காண்பித்தார்.
ஆர்க்டிக் வளைய பகுதியில் யாஸ்மின், மசூத் ஆகியோர் மிக சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். உள்ளூர் மக்கள் - தங்களை திறந்த மனதோடு
வரவேற்பதாகவும், தங்கள் மார்க்கத்தை மதிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
"முதலில் அனைவரும் ஒன்றாக நோன்பு வைப்போம், நோன்பு துறப்போம். ஆனால் இப்போது தனியாக தான் அவைகளை செய்கிறேன்" என மியாஹ்
மசூத் கூறுகிறார்.
"எப்போதும் போல் தான் இங்கு உள்ளது, விழாக்காலம் போன்ற எண்ணம் இல்லை. ஏதோ ஒன்றை இழந்தது போன்ற எண்ணம் உள்ளது".
**********************************************************************************
ரமழான் மாதத்தின் முடிவினை கொண்டாடும் தினமான ஈகை திருநாளில் வெளியிலும், பள்ளிவாசல்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளும், தெருவில் ஊர்வலங்களும், ஒரு மாதத்தின் முடிவில் முதல் முறையாக பகல் நேர விருந்தும் நடைபெறும். உணவு பட்டியல் பகுதி வாரியாக மாறும். பரிமாறப்படும் பதார்த்தங்களில் - திணித்து வைக்கப்பட்ட பேரிச்சம்பழங்களும் அடங்கும்.
பின்லாந்த் நாட்டில் 60,000 முஸ்லிம்கள் உள்ளனர். இது நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் ஆகும். 1870 களில் ரஷ்யாவில்
இருந்தும், துர்கியில் இருந்தும் தாதர் முஸ்லிம்கள், இங்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்தனர். ஹெல்சிங்கி பகுதியில் அவர்கள் தொழில் புரிந்து
வந்தனர். தங்கள் இல்லம், குடும்பம், நண்பர்கள் இல்லாமல் ஆயிரமாயிரம் கிலோமீட்டர் தூரத்தில் முக்கிய பண்டிகையை கொண்டாடுவது கஷ்டமாக
உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.
நன்றி:
பி.பி.சி. உலக சேவை |