இந்தியாவின் 66ஆவது சுதந்திர தின விழா 15.08.2012 அன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் அல்அமீன் நர்ஸரி மற்றும் துவக்கப்பள்ளியில் அன்று காலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு பள்ளியின் செயலாளர் ஏ.சி.செய்துல்லாஹ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் எம்.ஏ.புகாரீ முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவியரின் தமிழாக்கத்துடன் கூடிய கிராஅத்துடன் விழா நிகழ்வுகள் துவங்கின. பள்ளி முதல்வர் எம்.விஜயா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் கவுரவ ஆசிரியை சுப்புலட்சுமி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசிய கொடியேற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சுதந்திர தின உரையாற்றினார்.
நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஹைரிய்யா, பாக்கியஷீலா, கே.ஜமால் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்ட நர்சரி - ப்ரைமரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற இப்பள்ளியின் மாணவ-மாணவியருக்கு நினைவுக் கேடயம் மற்றும் சான்றிதழ்களை, சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, மாணவியர் பங்கேற்ற எல்ஜிம் நிகழ்ச்சி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளி ஆசிரியை ரமீஸா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியையர், மாணவியர் மற்றும் பெற்றோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
|