காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில், ஏழை மக்களுக்கான ஃபித்ரா உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி இன்று மாலை 04.30 மணி முதல் வினியோகிக்கப்பட்டது.
அரிசி, சீனி, ஜவ்வரிசி, மைதா மாவு, தேங்காய், எண்ணெய், மசாலா பொருட்கள் அடங்கிய - ரூபாய் 105 மதிப்பிலான சமையற்பொருட்களும், அரை கிலோ கோழி இறைச்சிக்கான டோக்கன் - என மொத்தம் ரூபாய் 160 மதிப்பிலான சமையல் பொருட்கள், 1250 பயனாளிகளுக்கு, அவரவர் தெருக்களில் பொறுப்பாளர்களை நியமித்து - அவர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று வினியோகிக்கப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து ஃபித்ரா ஸதக்கா - தர்மப் பணமாக நபர் ஒருவருக்கு ரூபாய் 100 வீதம் வசூலிக்கப்பட்ட தொகை, தனவந்தர்கள் வழங்கிய சிறப்பு அனுசரணை நிதி ஆகிய தொகைகளைக் கொண்டு இவ்வினியோகப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டுள்ளது.
சமையல் பொருட்கள் வினியோகத்தை - காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ ஆகியோரிணைந்து துவக்கி வைத்தனர்.
வினியோக ஏற்பாடுகளை - கரூர் ட்ரேடர்ஸ் ஹஸன் தலைமையில், எம்.ஐ.மஹ்மூத் சுலைமான், ஹாஜி எம்.என்.எம்.ஐ.மக்கீ, எம்.ஏ.அப்துல் ஜப்பார், ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ், எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் என்ற சாவன்னா, முஅத்தின் ஏ.எச்.லுக்மான், ஜப்பான் முஹம்மத் முஹ்யித்தீன், காயல்பட்டினம் நகர்மன்ற 01ஆவது வார்டு உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான், சாளை பஷீர், எஸ்.ஐ.சுல்தான் செய்யித் அபூ தாஹிர், எம்.ஏ.புகாரீ (48) உள்ளிட்டோரடங்கிய குழுவினர் செய்திருந்தனர். |