பாபநாசம் அணையில் தொடர்ந்து மூன்று நாட்களாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணைக்கு தண்ணீர் - தாமிரபரணி ஆற்றில் இருந்து வருகிறது. அணையின் மொத்த அளவு 143 அடியாகும். கடந்த சில வாரங்களாக தென் மேற்கு பருவ மழை பெய்யாததால் - அணையின் நீர் மட்டும் வெகுவாக குறைந்து வந்தது.
இந்த ஆணை மூலம் நீர் பெறும் - ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலும் நீர் தேக்கம் குறைந்ததால், அதில் இருந்து தண்ணீர் பெறும் மேல ஆத்தூரில் உள்ள நீர்தேக்கத்தில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீரும் குறைக்கப்பட்டு வந்தது. வழமையாக காயல்பட்டினத்திற்கு வழங்கப்படும் 20 லட்ச லிட்டர் தண்ணீர், முதலில் 15 லட்ச லிட்டர் என்றும், பிறகு 11 லட்ச லிட்டர் என்றும் குறைக்கப்பட்டது.
மேலும் - நீர்வரத்து நிலையில் முன்னேற்றம் இல்லை என்றால் - மேல ஆத்தூரில் இருந்து காயல்பட்டினத்திற்கு விடப்படும் தண்ணீர் நிறுத்தப்படும் என்றும், நிலத்தடி நீர் மூலம் நகருக்கு குடிநீர் வழங்கப்படவேண்டும் என்று அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் கடந்த 3 நாட்களாக (ஆகஸ்ட் 16, 17, 18) - பாபநாசம் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 15 அன்று நீர்மட்ட உயரம் 33.15 அடியாகும். அணைக்கு அன்றைய நீர்வரத்து 206 Cusecs (1 cusec என்பது வினாடிக்கு சுமார் 28 லிட்டர்) .
ஆகஸ்ட் 16 அன்று நீர்மட்ட உயரம் 34.50 அடியாகும். அணைக்கு அன்றைய நீர்வரத்து 721 Cusecs.
ஆகஸ்ட் 17 அன்று நீர்மட்ட உயரம் 35.00 அடியாகும். அணைக்கு அன்றைய நீர்வரத்து 366 Cusecs.
ஆகஸ்ட் 18 அன்று நீர்மட்ட உயரம் 38.15 அடியாகும். அணைக்கு அன்றைய நீர்வரத்து 1624 Cusecs.
அணையின் நீர்மட்டம் உயர்ந்தாலும் - அணையிலிருந்து வெளியிடப்படும் தண்ணீர் 204 Cusecs அளவிலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. |