தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் தமிழ் பேசும் முஸ்லிம்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் பள்ளி பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க பள்ளிவாசல்.
இங்கு, ஆண்டுதோறும் ரமழான் காலங்களில் கடைசி பத்து நாட்களில் நள்ளிரவில் கியாமுல் லைல் எனும் நீண்ட நிலைத் தொழுகை நடத்தப்பட்டு, இறுதியில் அனைவருக்கும் ஸஹர் - நோன்பு நோற்பு உணவு பரிமாறப்படுவது வழமை.
நடப்பாண்டும் ரமழான் கடைசி பத்து நாட்களில் இந்நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. கியாமுல் லைல் தொழுகையை நிறைவு செய்த பின்னர் அனைவரும் சிறிது நேரம் சந்தித்து அளவளாவிக் கொள்வர். பின்னர் அனைவரும் ஸஹர் உணவுண்ட பின், ஃபஜ்ர் - அதிகாலைத் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றிவிட்டு தமதில்லங்களுக்குக் கலைந்து செல்வர்.
நடப்பாண்டின் ஸஹர் - நோன்பு நோற்பு உணவு விருந்துபசரிப்பு மற்றும் ஸஹர் நேர ஒன்றுகூடல் காட்சிகள் பின்வருமாறு:-
தகவல் & படங்கள்:
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான்,
பாங்காக், தாய்லாந்து. |