காயல்பட்டினம் நகராட்சியில் மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடத்தப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சியில், நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சார்பில், மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா, 17.08.2012 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணியளவில், நகராட்சி பின்புற மைதானத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை தாங்கி அறிமுகவுரையாற்றியதோடு, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட - நகராட்சி நிர்வாக மண்டல மேலாளர் மோகன், தாமிரபரணி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சந்திரசேகரன், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார், பணி மேற்பார்வையாளர் செல்வமணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காயல்பட்டினம் கிளை மேலாளர் குணசேகரன், காயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் (பொறுப்பு) முத்து, ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் முருகானந்தம், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி வடிநிலக்கோட்ட பிரிவு அலுவலர் ரகுநாதன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் முருகேசன், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஏ.ஹைரிய்யா, கே.ஜமால் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில், ஆறுமுகநேரி பேரூராட்சி மன்றத் தலைவர் கல்யாண சுந்தரம், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன், ஆத்தூர் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஆண்டியப்பன், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன் உட்பட - அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், நகராட்சி அலுவலர்கள் - பணியாளர்கள், ஜமாஅத் நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.
விழாவின் நிறைவில், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்துகொண்ட அனைவருக்கும் பேரீத்தம்பழம், நோன்புக் கஞ்சி வடை வகைகள், பனிக்கூழ், குளிர்பானம், தேனீர் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.
அழைப்பையேற்று விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நிறைவில் நகர்மன்றத் தலைவர் நன்றி தெரிவித்தார்.
[செய்தி திருத்தப்பட்டது @ 7:00 pm / 18.08.2012] |