ஹிஜ்ரா கமிட்டியின் சார்பில், காயல்பட்டினம் கடற்கரையில் இன்று காலை நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
பிறையைக் கணக்கிட்டு நோன்பு மற்றும் பெருநாளை செயல்படுத்த வேண்டும் என்ற கருத்திலுள்ள ஹிஜ்ரா கமிட்டி சார்பில் இன்று (18.08.2012) காலை 07.00 மணியளவில், காயல்பட்டினம் கடற்கரையில் நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
தொழுகையை ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர் ரஹ்மான் வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் தேவாளையைச் சேர்ந்த மவ்லவீ தாஹிர் ஸைஃபுத்தீன் குத்பா பேருரையாற்றினார்.
நடப்பு நவீன கால தகவல் தொடர்பு சாதனங்களால் ஏற்படும் கலாச்சார சீரழிவுகள் குறித்து விளக்கிப் பேசிய அவர், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்.
இந்நிகழ்வில் - 22 ஆண்கள், 13 பெண்கள், 7 குழந்தைகள் என மொத்தம் 42 பேர் கலந்துகொண்டனர். நிகழ்வின் நிறைவில் அனைவருக்கும் சிற்றுண்டி பரிமாறப்பட்டது.
ஹிஜ்ரீ 1433ஆம் ஆண்டின் ரமழான் மாதம் 29 நாட்களைக் கொண்டு பூர்த்தியடைந்துள்ளதாகவும், 18.08.2012 சனிக்கிழமையன்று ஷவ்வால் முதல் தினம் என்றும் அக்கமிட்டியின் சார்பில் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.அப்துல் வாஹித்
படங்கள்:
P.M.ஹுஸைன் நூருத்தீன் |