ஆண்டுதோறும் ரமழான் மாதம் 27ஆம் நாள் முன்னிரவில், காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸும், அதனைத் தொடர்ந்து மார்க்க சொற்பொழிவும் நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், நடப்பாண்டில், 16.08.2012 அன்று அதிகாலை (நள்ளிரவு) 00.30 மணியளவில், இளைஞர் ஐக்கிய முன்னணி கீழ்ப்புற சதுக்கையில், காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் துணைத்தலைவர் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் தலைமையில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, குருவித்துறைப் பள்ளியின் இமாம் மவ்லவீ எம்.எல்.முஹம்மத் அலீ ஆலிம் மார்க்க சொற்பொழிவாற்றினார்.
இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நன்றி கூற, ஹாஃபிழ் நஹ்வீ எம்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்வில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிலர் உட்பட குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இளைஞர் ஐக்கிய முன்னணி பொறுப்பாளர்களான ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஜி இசட்.ஏ.சுல்தான் லெப்பை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
|