நோன்புப் பெருநாள் நெருங்கி வருவதையடுத்து, வெளியூர்களிலும் - வெளிநாடுகளிலும் பணிபுரியும் காயலர்கள் கூட்டங்கூட்டமாக தாயகம் திரும்பிய வண்ணம் உள்ளனர்.
ஊரின் வழமையான மக்கள் இருப்பை விட தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து, இன்று ஜும்ஆ தொழுகையின்போது நகரில் ஜும்ஆ பள்ளிகள் நிறைந்து காணப்பட்டது.
பெருநாள் மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் வெளி வளாகத்தில் சாமியானா பந்தல் நிறுவப்பட்டுள்ளது.
பள்ளியின் தரை தளம், மேல் தளம், வெளிப்பள்ளி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் நிறைந்து இட நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, பள்ளியையொட்டி சாலையிலும் 3 வரிசைகளில் பொதுமக்கள் நின்று தொழுதனர்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில், விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் தென்பகுதி வளாக கட்டிடத்தில், கட்டிடப் பணிகள் நிறைவுறா நிலையிலும், மக்கள் அமர்வதற்கு சிறப்பேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மகுதூம் ஜும்ஆ பள்ளியில், வழமைக்கு மாற்றமாக உள்பள்ளி - வெளிப்பள்ளி நிறைந்து காணப்பட்டது. |