காயல்பட்டினம் கடைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், 16.08.2012 அன்று சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி - அப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, காயல்பட்டினம் அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, மவ்லவீ ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன், எல்.கே.மேனிலைப்பள்ளியின் அரபி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ, ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், அதிமுக ஜெ. பேரவை நகரச் செயலாளர் ஹாஜி எல்.எஸ்.அன்வர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், மஸ்ஜிதுல் ஆமிர் மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் மற்றும் நகர ஜமாஅத்துகள் - பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர் புட்டி, பிரியாணி கஞ்சி, வடை, மட்டன் பஃப்ஸ், வாழைப்பழம், குளிர்பானம், ரோல்ஸ், பனிக்கூழ் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.
எஞ்சிய உணவுப் பதார்த்தங்களை பொதுமக்கள் வீணாக்கி விடாதிருக்கும் நோக்குடன் - தேவைப்படுவோருக்கு கைப்பை வழங்கப்பட்டது. தாம் உண்டது போக எஞ்சிய உணவுப் பொருட்களை அவர்கள் அப்பையில் தமதில்லங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகளான மீரான், ‘ஹாஜி பரீக்கா‘ முத்து முஹம்மத், ‘மீன் ஏலம்‘ பாபு, முத்து முஹம்மத் ஆகியோர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர். |