கடந்த 30.07.2012 அன்று அதிகாலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் ரெயில் நிலையத்தைத் தாண்டிச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு, காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணிக்க வணிகர் வி.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற விளக்கு முஹ்யித்தீன் உட்பட ஏராளமானோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் பலியான விளக்கு முஹ்யித்தீன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) உறுப்பினராவார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்குமுகமாக, மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி 15.08.2012 அன்று இரவு 08.00 மணியளவில் காயல்பட்டினம் காட்டுத் தைக்கா தெருவிலுள்ள விளக்கு முஹ்யித்தீனின் இல்லத்திற்கு வருகை தந்தார்.
அங்கு, அவரது மகன் காதிர் ஸாஹிப், சகோதரர்கள் அல்ஃதாஃப், லத்தீஃப், மைத்துனரான - காயல்பட்டினம் நகர்மன்ற 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் உள்ளிட்ட உறவினர்களை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், இவ்விபத்தினால் ஏற்பட்ட இழப்பிற்காக மத்திய - மாநில அரசுகள் சார்பில் வழங்கப்படும் நஷ்ட ஈடுகள், வேலைவாய்ப்பு உறுதி ஆகியன குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
அப்போது வைகோவுடன் தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க.செயலாளர் ஜோயல், பொருளாளர் காயல் அமானுல்லாஹ், மாவட்ட பிரதிநிதி செய்யிதலி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் வித்யா சுரேஷ், காயல்பட்டினம் நகர செயலாளர் பத்ருத்தீன், அவைத்தலைவர் காதிர் ஒலி, இளைஞரணி செயலாளர் ரியாஸுத்தீன் ஆகியோரும், நகரப் பிரமுகர்களான எம்.என்.சொளுக்கு, லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஷேக் முஹம்மத், காதிர் சுலைமான் ஆகியோரும் இருந்தனர்.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ |