ஆகஸ்ட் 19ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமையன்று (நாளை) நோன்புப் பெருநாள் என காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் பள்ளி நிர்வாகத்தால் செய்யப்பட்ட அறிவிப்பில், ஆகஸ்ட் 18ஆம் தேதியான இன்றுடன் ரமழான் 30 நாட்கள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதால், இன்றிரவு பெருநாள் இரவு என்றும், நாளை ஆகஸ்ட் 19ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள் தினம் என்றும், பெருநாளை முன்னிட்டு, நாளை காலை 07.30 மணிக்கு காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செய்தி திருத்தப்பட்டது @ 7:25 / 18.8.2012] |