காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சார்ந்த எம்.என்.காமில் என்பவர், விடுமுறையில் தான் தாயகம் வந்துள்ளதையடுத்து, நகரப் பிரமுகர்கள் மற்றும் தனது அனைத்து உறவினர்கள் பங்கேற்கும் வகையில் 17.08.2012 அன்று (இன்று) அதிகாலை 03.00 மணிக்கு ஸஹர் - நோன்பு நோற்பு நிகழ்ச்சியையும், மாலை 06.30 மணிக்கு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியையும், தனதில்லம் அமைந்துள்ள பிரபு ஹாஜியார் கோட்டையில் நடத்தினார்.
ஸஹர் நிகழ்ச்சியில், காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
மாலையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், குளிர்பானம், கறி கஞ்சி, வடை வகைகள், பழ வகைகள், பனிக்கூழ் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது. தேனீர் உபசரிப்புடன் இஃப்தார் நிகழ்ச்சி நிறைவுற்றது.
ஸஹர் - இஃப்தார் நிகழ்வுகளில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், துணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், குளம் மூஸா நெய்னா, ஹாஜி எஸ்.எச்.முஹம்மத் நூஹ், ஹாஃபிழ் கார்ப்பரேஷன் எஸ்.ஏ.இஸ்மாஈல், மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ, ஹாஜி என்.டி.ஷெய்கு மொகுதூம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர நிர்வாகி எம்.எம்.ஸலாஹுத்தீன், ஐ.ஐ.எம். செயலாளர் எஸ்.எச்.ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.எஸ்.) உட்பட - நகரப் பிரமுகர்கள், பொதுமக்கள் என சுமார் 300 பேர் வரை கலந்துகொண்டனர். பெண்களுக்கு திரை மறைவில் தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை - சுலைமானிய்யா ரியல்ஸ் ஷெய்கு சுலைமான் தலைமையில், ஹாஜி எம்.ஜெ.ஸிராஜுத்தீன், ஹாஜி எம்.என்.ஷாஹுல் ஹமீத், ஹாஜி பிரபு முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஜி ஏ.ஆர்.காதிர் ஸாஹிப், எம்.ஐ.ஜமீல், ஏ.எல்.நிஜார் அஹ்மத் உள்ளிட்டோர் செய்திருந்தனர். |