மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20 - ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க நாளாக (சத்பாவனா திவஸ்) அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாண்டு - ஆகஸ்ட் 20 (திங்கட்கிழமை) - அரசு கால அட்டவணைப்படி நோன்பு பெருநாள் என்பதால் அதற்கு முந்தைய வேலை நாளான இன்று (ஆகஸ்ட் 17)- அரசு அலுவலகங்களில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கப்படுகிறது.
இன்று காலை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தகவல்: செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை.
1. Re:... posted bysyedahmed (GZ, China)[17 August 2012] IP: 14.*.*.* China | Comment Reference Number: 21286
TRIBUTE OATH TAKEN BY OUR C.M. ON THE OCCASION OF RAJIV GHANDHI ' S BIRTH DAY WHICH SHOWS THE UNITY AND INTEGRITY TOWARDS THE NATION UNDER DEMOCRATISM & SOCIALISM.
2. We owe him......... posted byAbdul Wahid S. (Kayalpatnam.)[18 August 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 21289
ராஜீவ் காந்தி மதக் கலவரத்தினால் கொல்லப்படவில்லை, அல்லது மத நல்லிணக்கத்திற்காக கொல்லப்படவில்லை. மாறாக அரசியல் காரணக்களுக்காக படுகொலை செய்யப்பட்டார். இருந்தபோதிலும் அவர் பிறந்த நாளை மத நில்லிணக்க நாளாக தேர்ந்தெடுத்த காரணம் என்னவோ!
எனக்குத் தெரிந்து ஒரு விசயத்தில் நம் சமுதாயம் அவருக்கு கடமை பட்டுள்ளது. " Satanic Versus" நூலை உலகில் முதன் முதலில் தடை செய்த நாடு நம் நாடுதான். அதை தடை செய்யும் படி ஆணை பிறப்பித்தது இவர்தான்.
அந்த நூலை படித்துவிட்டு ராஜீவ் காந்திக்கு தடை செய்ய அறிவுரை வழங்கியது மணிசங்க அய்யர் என்பது இங்கு குறிப்பிட தகுந்தது.
--------------------------------------------------
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
" Politics is the last resort of scoundrels "
அந்த பழமொழி தவறு என்று நிரூபிக்கும் பொருட்டு கையோட லஞ்சம் வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழியும் இவர்கள் இந்நாளில் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross