இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளையின் முஸ்லிம் மாணவர் பேரவை மற்றும் காயிதேமில்லத் பேரவை ஆகிய பிரிவுகளின் சார்பில் 13.08.2012 அன்று மாலையில், கட்சியின் நகர அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைத் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதன் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர நிர்வாகிகளான எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, ஹாஜி அரபி ஷாஹுல் ஹமீத், ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, பிரபு செய்யித் அஹ்மத், கே.வி.ஏ.டி. புகாரி ஹாஜி அறக்கட்டளையின் அறங்காவலர் ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர், கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோரும், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், ஜெ.எம்.நூஹுத்தம்பி உள்ளிட்ட மாணவரணியினரும், சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறையின் சொற்பயிற்சி மன்றத்தில் கலந்துகொள்ளும் மாணவர்களும் என சுமார் 60 பேர் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு, பேரீத்தம்பழம், கறி கஞ்சி, வடை வகைகள், குளிர்பானம், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் தலைமையில், முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்.) மாவட்டத் தலைவர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர். முஸ்லிம் லீக் நகரப் பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நிகழ்ச்சிக்கு அனுசரணையளித்திருந்தார். |