ஐக்கிய அரபு அமீரகத்தில் கிடைக்கப்பெறும் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை சேகரித்து, காயலர்களுக்கும் தகுந்த வேலைவாய்ப்பைப் பெற்றளித்திட சிறப்பு முயற்சிகளை மேற்கொள்வதென, ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் துபை காயல் நல மன்றத்தின் ஆகஸ்ட் - 2012 மாத செயற்குழுக் கூட்டம் மன்றத் தலைவர் ஜனாப் ஜெ.எஸ்.ஏ.புகாரீ தலைமையில், அவர்களின் அல் குசைசில் அமைந்துள்ள வில்லாவில், 10.08.2012 வெள்ளிக்கிழமை அஸ்ர் தொழுகைக்குப் பின் சுமார் மாலை 05.00 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சகோதரர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை ஓத கூட்டம் இனிதே ஆரம்பமானது.
கூட்டத்தில் பேசப்பட்ட அம்சங்களும், எடுக்கப்பட்ட முடிவுகளும்:
1. மைக்ரோ காயல் அமைப்புடன் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக ஏற்றப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்துவது.
2. இம்மாத இறுதியில் கத்தார் காயல் நலமன்றத்தினருடன் இணைந்து தாயகத்தில் நகராட்சி மன்றத்தினருடன் ஈத் மேளாவில் பங்குகொள்வது.
3. தலைவர் அவர்கள் வருகை புரிந்தோரிடம் மன்றத்தின் செயல்பாடுகளை விளக்கி சொல்லியதோடு, எதிர் காலத்தில் இன்னமும் ஆக்கப்பூர்வமான வகையில் எப்படி செயல் படலாம் என்று அறிவுறுத்த ஒரு துணை குழு அமைக்கப்பட்டது.
4. இக்ராஃ அமைப்பு நமதூரில் நடத்தும் நிகழ்சிகளில் பங்குகொள்வது.
5. மன்ற உறுப்பினர்களிடம் ஜக்காத் தொகைகளை சரிவர பெற்றுக்கொள்வது மற்றும் புதிதாக மன்றதிர்க்காக பெற்ற ஜக்காத் நிதிகளை சரிவர பகிர்வது, பழைய நிதிகளின் கணக்குகளை ஊர் பிரதிநிதியிடம் சரி பார்த்து நேராக்குவது.
6. நமதூர் மக்களுக்கு அமீரகத்தில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கித் தருவதற்கு புதிதாய் குழு அமைத்து இங்கே இருக்கும் நிறுவனங்களின் மேலாளர்களை அடிக்கடி சந்திப்பது.
7. நமதூரில் நடைபெறும் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்களை நமது பெண்களின் வசதிக்காக "பெண்கள் தைக்கா" வில் வைத்து நடைபெறுவதற்கு சாத்தியக்கூறுகளை ஆராய்வது.
இவ்வாறு கூட்டத்தில் பேசப்பட்டு, முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட நிறைவில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் அனைவருக்கும் காயல்பட்டினம் கறி கஞ்சி, அறுசுவை பலகாரங்கள் பரிமாறப்பட்டது. துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு, துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
துணி M.O.அன்ஸாரீ |