இந்தியாவின் 66ஆவது சுதந்திர தின விழா இன்று நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் இன்று காலை 09.00 மணிக்கு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.ஏ.புகாரீ, சமூக ஆர்வலர் ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார்.
ஆசிரியர் ஜுபைர் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் நகர அரிமா சங்க தலைவருமான ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தேசிய கொடியேற்றினார்.
அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் கொடி வாழ்த்துப் பாடல் பாடியதோடு, தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்தனர்.
பின்னர், விழா தலைவரும் - பள்ளியின் தலைமையாசிரியருமான எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தலைமையுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, எல்.கே.பள்ளிகளின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம், எல்.கே.துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் நா.பீர் முஹம்மத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நன்றியுரைக்குப் பின் நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில் பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நகரப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
விழாவை நினைவுபடுத்தும் வகையில், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு நீரூற்றப்பட்டது.
தகவல்:
ஆசிரியர் அஹ்மத் மீராத்தம்பி |