இந்தியாவின் 66ஆவது சுதந்திர தின விழா நேற்று நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் மகுதூம் தெருவில் அமைந்துள்ள ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில், அப்பள்ளியின் இயக்குநரும் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நேற்று காலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் தேசிய கொடி ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து, 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில், பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியையர், மாணவ-மாணவியர், அவர்கள்தம் பெற்றோர் திரளாகக் கலந்துகொண்டனர். மழலையர் அனைவருக்கும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் இனிப்பு வழங்கினார்.
படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |