இன்று (ஆகஸ்ட் 15) - நாடு முழுவதும், 66வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா - 20 பேருக்கு பதக்கங்களும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார்.
இன்று பரிசுபெற்றவர்களில் - கீழக்கரை தாஸீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுமையா தாவூதும் ஒருவர். இவர் சமூக சேவைக்கான விருதினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதர விருதுகள் விபரம்:
1. தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது:
(a) டி. ராஜலட்சுமி
(b) டி. சிவரஞ்சனி
2. சிறந்த மாநகராட்சி: கோயம்புத்தூர்
3. சிறந்த நகராட்சி:
(a) முதல் இடம்: பொள்ளாச்சி
(b) இரண்டாம் இடம்: தேனி அல்லிநகரம்
(c) மூன்றாம் இடம்: நாமக்கல்
4. சிறந்த டவுன் பஞ்சாயத்:
(a) முதல் இடம்: தென்கரை
(b) இரண்டாம் இடம்: முசிறி
(c) மூன்றாம் இடம்: பெருந்துறை
5. மாற்று திறனாளிகளுக்கு சேவை செய்தோர்:
(a) சிறந்த மருத்துவர்: டாக்டர் டி.எஸ். சந்திரசேகர் (Medindia Hospital, சென்னை)
(b) சிறந்த சமூக சேவகர்: ஜெயா கிருஷ்ணஸ்வாமி (சிறப்பு குழந்தைகளுக்கான மதுரம் நாராயண் நிலையம், சென்னை)
(c) சிறந்த நிறுவனம்: நேத்ரோதயா, சென்னை
(d) அதிக மாற்று திறனாளிகளுக்கு வேலை வழங்கிய தனியார் நிறுவனம்: Texmo Industries, கோயம்புத்தூர்
6. சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி: சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி
7. பெண்களுக்கான சேவைகள்:
(a) பெண்கள் சேவையில் சிறந்த நிறுவனம்: உதகமண்டலம் சமூக நல சங்கம்
(b) பெண்கள் சேவையில் சிறந்த சமூக சேவகர்: டாக்டர் எஸ். சுமையா தாவூத் (திட்ட அலுவலர், சீதக்காதி NGO, ராமநாதபுரம் மாவட்டம்)
8. கடற்படை ஊழியர்கள் - பாராட்டு சான்றிதழ்:
(a) அப்துல் காதர் அக்பர்
(b) ராகேஷ் குமார்
(c) பல்வந்த்
(d) ராஜ் குமார் தொகஸ்
தகவல்:
ChennaiOnline.com மற்றும் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை.
கூடுதல் தகவல்:
முதுவை ஹிதாயத்
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 7:45/15.8.2012] |