இந்தியாவின் 66ஆவது சுதந்திர தின விழா இன்று நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில், அதன் அலுவலகம் அமைந்துள்ள அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி வெளி வளாகத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றப்பட்டது.
அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை தேசிய கொடியை ஏற்றி, அமைப்பின் சார்பில் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், அதன் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் மற்றும் கே.எம்.டி.சுலைமான், நேஷனல் காஜா, எஸ்.ஆர்.ரஹ்மத்துல்லாஹ், ஆசிரியர் மு.அப்துல் ரசாக் ஆகியோரும், பள்ளி மாணவர்கள் சிலரும் கலந்துகொண்டனர். |