எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றோர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு கடைசி தேதி 23.08.2012 வரை நீட்டிக்கப்பட்டு்ளளதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அரசு / தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் இதுவரை விண்ணப்பிக்காதோர் மற்றும் விண்ணப்பித்து எந்த தொழிற்பிரிவிலும் இடம் கிடைக்காதோர் பயிற்சியில் சேர்வதற்கு,
(1) அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
தூத்துக்குடி
(இருப்பு - கோரம்பள்ளம்)
தொலைபேசி எண் - 0461 - 2340133
(2) அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
திருச்செந்தூர்
தொலைபேசி எண் - 04639 - 2342253
மற்றும்
(3) அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
நாகலாபுரம்
தொலைபேசி எண் - 04638 - 242687
ஆகிய நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விண்ணப்பப் படிவத்தை, ரூபாய் 50 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும்,
நிரப்பப்பட்ட விண்ணப்பம் மேற்கண்ட ஏதேனும் ஓர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வந்து சேர்வதற்கான கடைசி நாள் 23.08.2012 என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளார். |