ஹைதராபாத் காயல் நல மன்றம் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் திரளான காயலர்கள் பங்கேற்றுள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஆந்திர மாநிலம் - ஹைதராபாத் நகரில் வசிக்கும் காயலர்களை ஒருங்கிணைத்து, கடந்த 12.05.2012 அன்று, ஹைதராபாத் காயல் நல மன்றம் துவக்கப்பட்டது.
இவ்வமைப்பின் 2ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, 12.08.2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில், ஹபீப் முஹம்மத் இல்லத்தில், மன்றத் தலைவர் ஹாஜி பி.எஸ்.முஹம்மத் ஹஸன் தலைமையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் நிஃமத்துல்லாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அடுத்து, கூட்டத் தலைவர் தலைமையுரையாற்றினார். இதுவரை மன்றம் ஆற்றியுள்ள பணிகள், அதனால் பயன்பெற்றோர், மன்றம் இனி ஆற்றவிருக்கும் பணிகள் குறித்த விபரங்களை விளக்கிப் பேசிய அவர், மன்ற உறுப்பினர்களின் உறவினர்களில் பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையிலுள்ள 10 குடும்பத்தினர் கண்டறியப்பட்டு, நடப்பாண்டு ரமழான் மாதத்தையொட்டி, அவர்களுக்கு தலா 10,590 ரூபாய் செலவில் அத்தியாவசிய சமையல் பொருட்கள் உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, உறுப்பினர்களின் - மன்றப் பணிகள் மற்றும் நகர்நலன் குறித்த கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மன்றத்தை அரசுப் பதிவு செய்தல்:
மகிழ்வோடு துவக்கப்பட்டுள்ள நமது ஹைதராபாத் காயல் நல மன்றத்தை முறைப்படி அரசுப் பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பம் அரிசடம் சமர்ப்பிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - காயலர் தற்காலிக தங்குமிடம்:
வேலைவாய்ப்பு தேடி ஹைதராபாத் நகருக்கு வரும் காயலர்கள் தங்குவதற்கு, மன்றத்தின் சார்பில் தற்காலிக இடவசதி ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
தங்குமிடம் தேவைப்படும் - தகுதியுள்ள காயலர்கள்,
அப்துல் பாரிஃ (கைபேசி எண்கள்: 09948316779 / 09989635357)
அப்துர்ரஹ்மான் மவ்லானா (கைபேசி எண்: 09989635231)
ஆகியோரைத் தொடர்புகொள்ள இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 - மின்னஞ்சல் முகவரி அறிமுகம்:
ஹைதராபாத் காயல் நல மன்றம் குறித்த தொடர்புகளுக்காக, kwahyd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியாக அறிவிக்கிறது.
தீர்மானம் 4 - திருமண வாழ்த்து:
இம்மாதம் 27ஆம் தேதியன்று, காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளிவாசலில் நடைபெறவிருக்கும் - மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் நிஃமத்துல்லாஹ் அவர்களின் திருமணத்திற்கு, மன்றத்தின் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
பின்னர் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்வில், பேரீத்தம்பழம், கறி கஞ்சி, வடை வகைகள், குளிர்பான வகைகள், பழ வகைகள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
அனைத்து நிகழ்வுகளிலும், மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, ஹைதராபாத் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அப்துர்ரஹ்மான் மவ்லானா (+91 99896 35231) |