காயல்பட்டினம் தீவுத்தெரு - பிரபு ஹாஜியார் கோட்டையில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்துகொண்டார். இதுகுறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான - அதிமுக தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் தெரிவித்த விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் தீவுத்தெரு - பிரபு ஹாஜியார் கோட்டையில், 12.08.2012 அன்று (நேற்று) மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். குருவித்துறைப் பள்ளியின் செயலர் ஹாஜி எஸ்.எம்.கபீர், ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், ஹாஜி கே.எஸ்.முஹம்மத் நூஹ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடன், அதிமுக காயல்பட்டினம் நகர செயலாளர் செய்யது காசிம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஹாஜி எல்.எஸ்.அன்வர், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் விஜயகுமார். இளைஞர் - இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.ஆர்.மனோகரன், அதிமுக ஒன்றிய செயலாளர்களான ராமச்சந்திரன், ஏரல் ரமேஷ் மற்றும் நகர நிர்வாகிகளான என்.எம்.அஹ்மத், எம்.இ.எல்.புகாரீ, ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை,
நகர ப்ரமுகர்களான ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற சொளுக்கு முத்து ஹாஜி, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், துணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், குருவித்துறைப்பள்ளி இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.இஸ்மாஈல், மருத்துவர் பாவநாசகுமார், கம்பல்பக்ஷ் ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத், எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப், எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் பி.மீராசா, மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஹாஜி முஹம்மத் நூஹ், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, எம்.என்.காமில், எம்.ஜெ.ஸிராஜுத்தீன்,
காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், உறுப்பினர்களான ஹாஜி ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, ஹாஜி எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும், பொதுமக்கள் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்திரான தமிழக அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நோன்புக் கஞ்சி பருகி இஃப்தார் - நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், கறி கஞ்சி, பனிக்கூழ், கேக், ரோல்ஸ், வடை, தேனீர் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.
இந்த இஃப்தார் நிகழ்ச்சியின்போது, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும், பொது நல அமைப்பினரும், சிறப்பு விருந்தினரான தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா அனுசரணையளித்திருந்தார்.
இவ்வாறு, அதிமுக தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் தெரிவித்தார்.
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 15:48/17.08.2012] |