காயல்பட்டினம் - ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், கடைப்பள்ளி எதிரில் அமைந்துள்ளது காக்கும் கரங்கள் நற்பணி மன்ற அலுவலகம். இவ்வமைப்பின் சார்பில் - அதன் மேல் தளத்தில், இன்று மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை துணைச் செயலாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவருமான ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முஸ்லிம் லீக் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், துளிர் அறக்கட்டளை செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் - ஐ.ஐ.எம். பொறுப்பாளர் எஸ்.எச்.அஹ்மத் லுத்ஃபீ, தேமுதிக கட்சியின் நகரச் செயலாளர் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ், இளைஞர் ஐக்கிய முன்னணி (ஒய்.யு.எஃப்.) செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன், அரிமா சங்க நகரப் பொருளாளர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், ஆசிரியர் மு.அப்துல் ரசாக், முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் ஆகியோருட்பட நகர ஜமாஅத்துகள் மற்றும் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற உறுப்பினர்கள், சிறப்பழைப்பாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இந்த இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், கறி கஞ்சி, வடை வகைகள், குளிர்பான வகைகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில், அதன் துணைத்தலைவர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் உள்ளிட்ட அமைப்பினர் செய்திருந்தனர்.
படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |