இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்ற அபூதபீ காயல் நல மன்றத்தின் 6ஆவது செயற்குழுக் கூட்டத்தில், அம்மன்றத்திற்கான புதிய பொருளாளர் மற்றும் துணை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அமீரக தலைநகர் அபூதபீயில் காயல் நல மன்றத்தின் ஆறாவது செயற்குழுக் கூட்டம் 09 - 08 - 2012 அன்று மாலை மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஜனாப்.N.M. சுப்ஹான் பீர் முஹம்மது தலைமையில் மன்றச் செயலாளர் ஜனாப் V.S.T.ஷேக்னா லெப்பை அவர்களின் இல்லத்தில் வைத்து கூடியது. ஹாபிஃழ் இஸ்ஹாக் லெப்பை ஆலிம் அவர்கள் இறைமறை கிராத் ஓத கூட்டம் இனிதே துவங்கியது.
மருத்துவக் கையேடு:
இறுதி கட்டத்தை எட்டியுள்ள இம்மருத்துவ கையேட்டின் மீதமுள்ள ஒரு சில பணிகளையும் விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டு விரைவில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.
மன்றத்தின் புதிய பொருளாளர் மற்றும் துணைக்குழு நியமனம்:
மன்றத்தின் புதிய பொருளாளராக செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ழரி அவர்கள் ஒருமனதாக தக்பீர் முழங்க தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு துணையாக தற்போது பொறுப்பில் இருக்கும் ஜனாப் விளக்கு இப்ராஹீம் அவர்களுடன் ஜனாப் நோனா K. அபூஹுரைரா மற்றும் ஹாபிஃழ் இஸ்ஹாக் லெப்பை ஆலிம் மஹ்ழரி ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டார்கள்.
சிறப்பு விருந்தினரின் வருகை:
காயல்பட்டினத்தின் தாவா சென்டரின் நிர்வாகி ஜனாப் ஜக்கரியா அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். அவர்கள் இம்மன்றம் சிறிது காலத்திற்கு முன்புதான் தோன்றியது என்றிருப்பினும் அவர்களின் பல வேலைகளுக்கு மத்தியிலும் நமது காயல் மக்களின் துயரம் துடைக்க பல அற்புதமான புதுப்புது திட்டங்களை இயற்றியும் செயல்படுத்தியும் உள்ளது மிக பழமைவாய்ந்த அனுபவமுள்ள மன்றமாகவே நான் கருதுகிறேன் என்று வெகுவாக பாராட்டி பல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தந்து வெற்றி பெற துஆ செய்தார்கள்.
இஃப்தார் - நோன்பு துறப்பு உபசரிப்புக்கு நன்றி:
மன்றச் செயலாளர் ஜனாப் V.S.T.ஷேக்னா லெப்பை, செயற்குழு உறுப்பினர் P.M. ஹுசைன் நூர்தீன் மற்றும் K.M.M. அபு ஆகியோர்கள் அருள் நிறைந்த இப்புனித ரமலான் மாதத்தில் நமது மன்ற செயற்குழுவினர்க்கு இஃப்தார் - நோன்பு துறப்பு வெகுச் சிறப்பாக ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி கூறி அனைவர்களின் பாராட்டு மற்றும் துஆக்களை பெற்றுக்கொண்டார்கள்.
அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதியன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் ஹாபிஃழ் ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் அறிவித்தார். இறுதியாக ஹாஃபிழ் ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ழரி துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.E.முஹ்யித்தீன் அப்துல் காதிர்,
செய்தித் தொடர்பாளர்,
அபூதபீ காயல் நலம ன்றம்.
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்.
[செய்தி திருத்தப்பட்டது @ 18:31/14.08.2012] |