இந்தியாவின் 66ஆவது சுதந்திர தின விழா நேற்று நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியருகில் அமைந்துள்ள கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை அலுவலக வளாகத்தில், சுதந்திர தின விழா நேற்று காலை 08.30 மணிக்கு நடைபெற்றது.
மாணவர் கே.வி.எம்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். அதன் செய்தித் தொடர்பாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாணவரணி பொறுப்பாளர் கே.வி.ஏ.டி.கே.ஹம்ஜத் ஸதக்கத்துல்லாஹ் சிற்றுரையாற்றினார்.
பின்னர், விழாவிற்குத் தலைமை வகித்த - கே.வி.ஏ.டி. அறக்கட்டளை அறங்காவலர் ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர் அறிமுகவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தேசிய கொடி ஏற்றி வைத்தார். அவருக்கு, அறக்கட்டளை சார்பில் சால்வை வழங்கி கண்ணிபப்படுது்தப்பட்டது. பின்னர், அனைவரும் இணைந்து தேசிய ஒருமைப்பாட்டுப் பாடல் பாடினர்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஹைரிய்யா, கே.ஜமால் சீருடையார்புரம் நிஸார், கே.வி.ஏ.டி.அறக்கட்டளை அறங்காவலர் எஸ்.எம்.மீரா கபீர் மற்றும் நகர பிரமுகர்கள் - பொதுமக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை மேலாளர் ஆஷிக் செய்திருந்தார்.
படங்கள்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக
ஃபாஸில் ஸ்டூடியோ |